Tuesday 17 July 2018

அவையை மதிப்பதால் வெளிநடப்பு செய்யவில்லை - கைரி ஜமாலுடின்


கோலாலம்பூர்-
மக்களவை சபாநாயகர் விவகாரத்தில் எதிர்க்கட்சியினர் (தேசிய முன்னணி, பாஸ்) வெளிநடப்பு செய்த நிலையில் ரெம்பாவ் நாடாளுமன்ற உறுப்பினர் கைரி ஜமாலுடின் வெளிநடப்பு செய்யாதது சமூக ஊடகங்களில் வைரலாக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து பேசிய கைரி ஜமாலுடின், அவை மரியாதையை கருத்தில் கொண்டு வெளிநடப்பு செய்யவில்லை எனவும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் தமது நற்பெயருக்கு களங்கம் ஏற்படக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு இம்முடிவை துணிகரமாக எடுத்ததாகவும் சொன்னார்.

அவை மரியாதை உணர்வு தம்மிடம் இருப்பதாகவும் இந்த முடிவு தனது தனிப்பட்ட முடிவு என்றும் அவர் குறிப்பிட்டார்.

இளைஞர், விளையாட்டு துறை முன்னாள் அமைச்சரான கைரி ஜமாலுடினின் இத்தகைய செயலை சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டி வருகின்றனர்.

No comments:

Post a Comment