Sunday 18 March 2018

தேமு வெற்றி பெற வேண்டுமானால் உள்ளூர் வேட்பாளரை களமிறக்குங்கள் - ஐஆர்சி கோரிக்கை

ரா.தங்கமணி

சுங்கை சிப்புட்-
வரும் 14ஆவது பொதுத் தேர்தலில் சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ளூர் வேட்பாளரே களமிறக்கப்பட வேண்டும். அப்போதுதான் தேசிய முன்னணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் என சுங்கை சிப்புட் இந்தியர் நலனபிவிருத்தி சங்கம் (ஐஆர்சி) கேட்டுக் கொண்டது.

உள்ளூர் வேட்பாளரே இங்குள்ள மக்களின் தேர்வாக அமைகின்ற சூழலில் தேசிய முன்னணி வெற்றி பெற வேண்டுமானால் உள்ளூர் வேட்பாளர் களமிறக்குவதை கட்சி மேலிடம் பரிசீலனை செய்ய வேண்டும் அதன் தலைவர் கிருஷ்ணன் வேலாயுதம் கூறினார்.

மக்களுக்கு அறிமுகமே இல்லாதவரால் எவ்வாறு வெற்றி பெற முடியும்? இங்குள்ள மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண உள்ளூர் வேட்பாளர்தான் வேண்டும்.

வெளியிலிருந்து வருபவர்கள் வெற்றி பெற்றால் மட்டுமே மக்களை கவனிப்பர், தோற்றால் எதுவுமே கண்டு கொள்ளாமல் சென்று விடுவர். இதுதான் கடந்த கால தேர்தலில் நிகழ்ந்த அவலநிலை.

இந்நிலை தொடரக்கூடாது என்றால்  உள்ளூர் வேட்பாளரே இத்தேர்தலில் களமிறக்க வேண்டும். தகுதி வாய்ந்தவர்கள் பலர் இங்குள்ள நிலையில் அவர்களில் சிறந்தவர்களை கண்டறிந்து வாய்ப்பு வழங்க கட்சி மேலிடம் முனைய வேண்டும் என  கிருஷ்ணனுடன் சங்கத்தின் துணைத் தலைவர் குமாரன் கருப்பன், துணைச் செயலாளர் மனோகரன் வீரப்பன் ஆகியோர் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment