ஜோர்ஜ்டவுன் -
மாணவி வசந்தபிரியாவின் மரண விசாரணை வரும் மே 24,25ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது.
ஆசிரியரின் கைப்பேசி களவு போனது தொடர்பில் விசாரிக்கப்பட்ட மாணவி வசந்தபிரியா, வீட்டின் அறையில் தூக்கு மாட்டி தற்கொலைக்கு முயன்றுள்ளார். ஆயினும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் அது பலனளிக்காமல் கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி மரணமடைந்தார்.
மாணவியின் மரணம் தொடர்பிலான விசாரணை ஆவணங்களை பெற்றுக் கொள்வதற்காக தாம் நீதிமன்றத்திடன் விண்ணப்பம் செய்திருப்பதாக கைப்பேசியை தொலைத்த ஆசிரியையின் சார்பில் கண்காணிக்க அமர்த்தப்பட்டுள்ள வழக்கறிஞர் வி.பார்த்திபன் கூறினார்.
வசந்தபிரியாவின் மரண விவகாரம் தொடர்பில் எத்தனை பேர் சாட்சிகளாக நிறுத்தப்படுவர் என்பது தெரியாத நிலையில் எத்தனை நாட்களுக்கு இவ்வழக்கு நடத்தப்படும் என்பது குறித்து கருத்துரைத்த முடியாது என இந்த
மரண விசாரணையை நடத்தும் நீதிபதி நோர்சால்ஹா ஹம்சா குறிப்பிட்டார்.
நிபோங் திபால் இடைநிலைபள்ளியில் இரண்டாம் படிவம் பயின்று வந்த மாணவி வசந்தபிரியாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மனமுடைந்த தற்கொலைக்கு முயன்றார் என கூறப்படுகிறது.
No comments:
Post a Comment