Monday 5 March 2018

எனக்கு தேவை 100% முழுமையான ஆதரவு; கிடைக்குமா? - டத்தோ நரான் சிங்


புனிதா சுகுமாறன்

ஈப்போ-
வரும் 14ஆவது பொதுத் தேர்தலில் புந்தோங் தொகுதியில் நான் போட்டியிட்டால் எனக்கு 100 விழுக்காடு முழுமையான ஆதரவு தேவை என மைபிபிபி கட்சியின் புந்தோங் தொகுதித் தலைவர் டத்தோ நரான் சிங் கூறினார்.

இங்கு போட்டியிடும் எனக்கு சில கட்சிகள் 20 விழுக்காடு ஆதரவு கிடைக்கும், 30 விழுக்காடு ஆதரவு கிடைக்கும் என கூறுகின்றன. ஆனால் எனக்கு தேவை 20, 30 விழுக்காடு அல்ல; 100 விழுக்காடு முழுமையான ஆதரவு.

இங்கு வாக்காளர்களாக உள்ள ஒவ்வொரு சமூகத்தின் முழுமையான ஆதரவை பெற்று மக்கள் பிரதிநிதியாக உருவெடுக்கவே நான் விரும்புகிறேன். அதற்கேற்ப இங்குள்ள ஒவ்வொரு வாக்காளரும் எனக்கு முழுமையான ஆதரவை தர வேண்டும்.

நேற்று இங்கு நடைபெற்ற மைபிபிபி கட்சியின் சீனப் புத்தாண்டு நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இவ்வாறு கூறினார்.

சீன சமூகத்தின் ஆதரவு எனக்கு முழுமையாக கிடைக்குமா? என இங்கு கூடியிருந்த சீன மக்களை நோக்கி டத்தோ நரான் சிங் கேள்வி எழுப்பிய நிலையில், சீன மக்கள் கரகோஷம் எழுப்பி தங்கள் ஆதரவை புலப்படுத்தினர்.

இந்நிகழ்வில் கல்வியில் சிறந்து விளங்கிய 5 மாணவர்களுக்கு நிதியுதவிகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் கேமரன் மலை மைபிபிபி கட்சியி தலைவர் டத்தோஶ்ரீ கண்ணா, புந்தோங் மைபிபிபி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் செபஸ்தியன், மஇகா கிளைத் தலைவர் ஜெயகோபி, மைபிபிபி கட்சியின் இளைஞர், மகளிர் பிரிவினர் உட்பட சீன சமூகத்தினர் திரளாக கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment