Sunday 4 March 2018

எம்எச் 370: 'அப்பா வேலையில் இருப்பதாக மகன் நினைத்துக் கொண்டிருக்கிறான்'


பந்திங்-
எம்எச் 370 விமானப் பயணி எஸ்.புஸ்பநாதனின் மூத்த மகனுக்கு தன் தந்தை காணாமல் போன விவகாரம்  இன்னமும் தெரியாது.

7 வயதான அச்சிறுவன் தனது இன்னும் வேலை செய்து கொண்டிருக்கிறார் என நினைத்துக் கொண்டிருக்கிறான். அவனிடம் உண்மையை கூற எங்கள் குடும்பத்தினருக்கு மனம் வரவில்லை என புஸ்பநாதனின் தந்தை ஜி.சுப்பிரமணியம் தெரிவித்தார்.

தனது பேரப்பிள்ளை பி.வர்மர்,'ஏன் அப்பா  வேலை முடிந்து வீட்டுக்கு வரவில்லை; அவருக்காக வெகு நாட்களாக காத்துக் கொண்டிருக்கிறேன்' என கூறுகிறான்.

ஆனால் அவனிடன் உண்மையை கூற குடும்பத்தினருக்கு மனம் வரவில்லை. புஸ்பநாதன் வேலை செய்துக் கொண்டிருப்பதாக ஒரு கதையை உருவாக்கி வைத்திருக்கிறோம்.

வர்மர் 3 வயதாக இருக்கும்போதே அவனது தந்தை காணாமல் போய்விட்டார். இப்போது அவன் முதலாமாண்டு பயில்கிறான். அப்பாவின் வருகைக்காக அவன் இன்னமும் காத்துக் கொண்டிருக்கிறான் என தெலுக் பங்ளிமா காராங்கிலுள்ள இல்லத்தில் அவர் கூறினார்.

34 வயதான புஸ்பநாதன் ஒரு தகவல் தொழில்நுட்ப வல்லுனர் ஆவார்.

கடந்த மார்ச் 8, 2014இல் 239 பயணிகளுடன் காணாமல் போன எம்எச் 370 விமானத்தில் பயணம் செய்தவர்களில் புஸ்பநாதனும் ஒருவராவார். இவ்விமானத்தில் 14 நாடுகளைச் சேர்ந்த பயணிகள் பயணம் செய்தனர்.

மாயமான புஸ்பநாதன் வர்மரை மட்டுமல்லாது அவரது மனைவி ஜி.தேவி, மற்றொரு மகன் தசுவர்மன் (4) ஆகியோரையும் தவிக்கவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment