ஈப்போ-
புந்தோங் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுவதற்கு மைபிபிபி கட்சி விரும்புவதாகவும் மாநில தேசிய முன்னணி தலைமைத்துவம் அதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் எனவும் அக்கட்சியின் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எம்.கேவியஸ் கேட்டுக் கொண்டார்.
நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தல் வெகு விரைவில் நடைபெறலாம் என்ற நிலையில் புந்தோங் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட விருப்பம் கொண்டுள்ளது.
இத்தொகுதி முன்பு மசீச வசம் இருந்த நிலையில் கடந்த 13ஆவது பொதுத் தேர்தலில் மஇகா போட்டியிட்டது. ஆனால் அத்தேர்தலில் தோல்வி கண்ட பின்னர் மக்களுக்கான சேவை எதுவுமே வழங்காமல் மஇகா வேட்பாளர் காணாமல் போய் விட்டார்.
கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக மைபிபிபி கட்சி இங்கு களமிறங்கி மக்கள் சேவையாற்றிக் கொண்டிருக்கும் சூழலில் இத்தொகுதியை மைபிபிபி கட்சியிடம் ஒப்படைக்க வேண்டும் என பரிந்துரைக்கிறேன்.
இத்தொகுதியின் மைபிபிபி வேட்பாளராக டத்தோ நரான் சிங் மக்கள் சேவையாற்றிக் கொண்டிருக்கும் நிலையில் அவருக்கு இங்கு போட்டியிடும் வாய்ப்பு அளிக்கப்பட்டால் நிச்சயம் இத்தொகுதியை தேசிய முன்னணி கைப்பற்றக்கூடும் என நேற்று இங்கு நடைபெற்ற மைபிபிபி கட்சியின் சீனப் பெருநாள் கொண்டாட்டத்தின்போது டான்ஶ்ரீ கேவியஸ் கூறினார்.
No comments:
Post a Comment