Tuesday 20 March 2018
குண்டுகள் துளைக்கப்பட்ட நிலையில் எம்எச் 370 விமானமா?; உண்மையில்லை - அமைச்சர்
கோலாலம்பூர்-
மாயமான முறையில் காணாமல் போன எம்எச் 370 விமானம் குண்டுகளால் துளைக்கப்பட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவலை மலேசிய போக்குவரத்து அமைச்சர் டத்தோஶ்ரீ லியோவ் தியோங் லாய் கூறினார்.
கடந்த 2014 மார்ச் 8ஆம் தேதி 239 பயணிகளுடன் கோலாலம்பூரிலிருந்து சீனா, பெய்ஜிங்கிற்கு புறப்பட்ட எம்எச் 370 சில மணிநேரங்களிலேயே ராடார் கோபுரத்துடனான தொடர்பை இழந்தது.
பல நாள் தேடுதலுக்கு பின்னர் எம்எச் 370 விமானம் இந்தியப் பெருங்கடலில் தனது பயணத்தை முடித்துக் கொண்டதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் எம்எச் 370 விமானம் குண்டுகள் துளைக்கப்பட்ட நிலையில் கடலுக்கு அடியில் கண்டறியப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பொறியியலாளர் ஒருவர் வெளியிட்டுள்ள தகவலை டத்தோஶ்ரீ லியோவ் தியோங் லாவ் மறுத்தார்.
எம்எச் 370 விமானத்தை தேடுவதில் ஆஸ்திரேலிய போக்குவரத்து பாதுகாப்பு கழகத்துடன் (ATSB) அரசாங்கம் முழு ஒத்துழைப்பு நல்கியது.
கூகுள் எர்த் மூலமாக மொரிஷியஷில் இருந்து 22.5 கிமீட்டர் தொலைவில் 16 கி.மீ தெற்கில் உள்ள ரவுண்ட் தீவில் விமானத்தின் பாகம் சிதறி கிடப்பதை காண்பிப்பதாக பொறியியலாளர் பீட்டர் மோகன் தகவலை வெளியிட்டுள்ளார்.
எம்எச் 370 விமானத்தில் 'ஆதாரங்களை ஆஸ்திரேலிய போக்குவரத்து பாதுகாப்பு கழகம் மறைத்து விட்டதாக அவர் கூறியுள்ளார்.
இது குறித்து பேசிய டத்தோஶ்ரீ லியோவ், பீட்டர் வெளியிட்டுள்ள படங்கள் எம்எச் 370 விமானம் காணாமல் போனபோது கண்டறியப்பட்ட புகைபடங்கள் ஆகும்.
இந்த புகைப்படங்களை மலேசிய வான் போக்குவரத்து கழகம் (CAAM) ஆராயும் என கூறிய டத்தோச்ரொ லியோவ், அடிப்படையற்ற இந்த தகவலை பொதுமக்கள் பகிர்வதை தவிர்க்க வேண்டும் என கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment