ரா.தங்கமணி
ஈப்போ-
விரைவில் நடைபெறவுள்ள நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலில் பேராக் மாநிலத்தில் மூன்று சட்டமன்றத் தொகுதிகளில் மஇகா போட்டியிடவுள்ள நிலையில் தனது பாரம்பரியத் தொகுதியான ஊத்தான் மெலிந்தாங் கைநழுவி செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த பொதுத் தேர்தலில் புந்தோங், ஜெலாப்பாங், ஊத்தான் மெலிந்தாங் ஆகிய தொகுதிகளில் மஇகா போட்டியிட்ட நிலையில், இம்முறை சுங்காய், புந்தோங், ஜெலாப்பாங் தொகுதிகளில் மஇகா போட்டியிடக்கூடும் என நம்பப்படுகிறது.
சுங்காய் தொகுதியில் பேராக் மாநில மந்திரி பெசாரின் சிறப்பு ஆலோசகர் டத்தோ வ.இளங்கோ, புந்தோங் தொகுதியில் மஇகா தேசிய மகளிர் பிரிவுத் துணைத் தலைவியும் பேராக் மாநில மஇகா மகளிர் பிரிவுத் தலைவியுமான திருமதி தங்கராணி, ஜெலாப்பாங் தொகுதியில் பேராக் மாநில மஇகா செயலாளர் தங்கராஜு ஆகியோர் வேட்பாளராக களமிறங்கவுள்ளனர்.
தற்போது எதிர்க்கட்சி வசமுள்ள இந்த தொகுதிகளில் களமிறங்கும் மஇகா வேட்பாளர்கள் மிக கடுமையான போட்டியை எதிர்கொள்ள நேரிடும் என கருதப்படுகிறது.
No comments:
Post a Comment