Thursday 15 March 2018

தேமு வேட்பாளரின் வெற்றியை இலக்காகக் கொள்வோம்- தங்கராணி


புனிதா சுகுமாறன்

ஈப்போ-
நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தல் மிகவும் பலபரீட்சை வாய்ந்ததாக கருதப்படுவதால் வேட்பாளர் யார் என்பதை ஆராய்ந்து களமிறங்கி பணியாற்றுவதை விட தேமுவின் வெற்றியை இலக்காகக் கொண்டு பணியாற்ற வேண்டும் என மஇகா தேசிய மகளிர் பிரிவு துணைத் தலைவி திருமதி தங்கராணி குறிப்பிட்டார்.

கடந்த கால தேர்தல்களை போல் இல்லாமல் இம்முறை மிகவும் பலம் வாய்ந்த தேர்தலாக கருதப்படும் 14ஆவது பொதுத் தேர்தலில் தேமு வேட்பாளர்களின் வெற்றி உறுதி செய்யப்படுவது அவசியமான ஒன்றாகும்.

இந்த தேர்தலில் வேட்பாளர் மீதான காழ்ப்புணர்ச்சி, தனிபட்ட கோபம் ஆகியவற்றை தவிர்த்து விட்டு களமிறங்கி மக்கள் மத்தியில் ஆதரவை திரட்ட முனைய வேண்டும்.

ஒவ்வொரு சட்டமன்ற, நாடாளுமன்றத் தொகுதியையும் கைப்பற்ற வேண்டிய அவசியம் நமக்கு ஏற்பட்டுள்ளது. இதில் 'நீயா, நானா' என்ற போட்டித்தன்மை இல்லாமல் வேட்பாளரின் வெற்றியை உறுதி செய்ய ஆக்ககரமான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

கட்சி தலைமைத்துவம், தேமு தலைமைத்துவம் ஆகியவை முடிவெடுத்து களமிறக்கும் வேட்பாளர்களின் வெற்றியை உறுதி அனைத்து தரப்பினரும் களமிறங்கி பணியாற்ற வேண்டும் என வலியுறுத்திய தங்கராணி, வெற்றி பெற்றால் மட்டுமே 'மஇகா ஆலமரம் போல் தலைநிமிர்ந்து நிற்க முடியும்' என  பேராக் மாநில மஇகா மகளிர் பிரிவுத் தலைவியுமான அவர் கூறினார்.

No comments:

Post a Comment