Tuesday 20 March 2018

மனவளம் குன்றிய சிறார்களுக்கு அன்பும் கனிவும் மட்டுமே அருமருந்தாகும் -ஶ்ரீ சாய் பிரியா


நேர்காணல்:  புனிதா சுகுமாறன்

புக்கிட் மெர்தாஜம்-

'ஆட்டிஸம்' (Autism).... இந்த நோயை பற்றி பெரும்பாலானவர்கள் அறிந்திருக்க முடியாது. மனவளர்ச்சி குன்றிய நிலையில் தனது எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கி நிற்கின்ற சிறார்கள் வேதனைகள் விவரிக்க முடியாததாகும்.

சிந்திக்கும் திறனை இழந்து மனவளம் குன்றிய குழந்தைகளுக்கு கல்வியை போதித்து இன்று அவர்களும் ஒரு சராசரி குழந்தைகள் போல் செயல்பட தான் கற்ற கல்வியை கொண்டு சிறப்பு குழந்தைகளுக்கு  பயிற்சிகளை வழங்குவதோடு 'புசாட் ஜாகாஹான் ஆர்க்கிட்' பாலர் பள்ளியையும் வழிநடத்திக்கொண்டு வருவதாக கூறுகிறார் ஶ்ரீ சாய் பிரியா.

 பகுதி நேரமாக 1 டூ 1 எனும் முறையில்  சிறப்பு குழந்தைகள் ஒவ்வொருவரின் இல்லத்திற்கு சென்று அவர்களை அன்பாக அரவனைத்து பயிற்சிகளை  கற்று தருகிறார் ஸ்ரீ சாய் பிரியா.

 வருமானம்த்திக்கு வேலை செய்கிரொம் என்றில்லாமல் சிறப்பு குழந்தைகளுக்கு 3மாதம் தான் கற்று தரும் 'ஆட்டிசம்' கல்வியில் அவர்களை தங்களை உணரும்  ஆற்றலை பக்குவமாக கற்பித்து வருவதாக கூறும் ஶ்ரீ சாய் பிரியா,  இத்தகைய குழந்தைகளுக்கு பயிற்சிகளை வழங்கும் தனது அனுபவங்களை 'மை பாரதம்' மின்னியல் ஊடகத்துடன் பகிர்ந்துக் கொண்டார்.

அவருடைய நேர்காணல் வாசகர்களுக்கு இங்கே தொகுக்கப்பட்டுள்ளது.

கே: இந்த துறையில் எவ்வாறு  ஈடுபட்டீர்கள்?

: கற்றல், கற்பித்தல் துறையில் ஈடுபடுவதற்கு மிகவும் ஆர்வம் செலுத்தி வந்தேன். சிறுவர்களுக்கு குறிப்பாக 1 வயது அல்லது 2 வயதுள்ள சிறார்களுக்கு கல்வியை கற்று தருவதற்கு மிக ஆவல் கொண்டிருந்தேன். அதுதான்  என்னுடைய ஆர்வத்தின் அடிப்படையில் இந்தத் துறையை தேர்ந்தெடுத்ததற்கான காரணமாகும்.

கே: உயர் கல்வியை எங்கு தொடங்குனிர்கள் அதை பற்றி விரிவாக கூறுங்கள்?

: எனது உயர் கல்வியை ஜெர்மனியிலுள்ள ஹம்பெர்க் ஏஇ அசோசியேஷன் கல்லூரியில் ஆட்டிசம் கல்வி எபிஎ லெவல் 2-ஐ   ( Hamburg AE association Germany , autism studie ABA level 2) மேற்கொண்டேன். மலேசியாவில் இந்த ஆட்டிசம் துறையை சார்ந்து படிப்பது ஒரு வாய்ப்பாக அமையவில்லை ஆட்டிசம் கல்வியை பற்றி சமூக வலைதலங்களில் பார்த்து இந்த ஆட்டிசம் கல்விக்கு வெளிநாடுகளில் வாய்ப்புகள் அதிகம் இருப்பதை அறிந்துக் கொண்டேன்.  எனது உறவினர்களை தொடர்பு கொண்டு 14 நாட்கள் பயிற்சியை  முடித்த பிறகு தாயகம்  திரும்பினேன்.

கே: பயிற்சிக்கு பின்னர் வேலை பெறுவதில் சிரமங்களை எதிர்கொண்டீர்களா?

: வெளிநாட்டில் கல்வியைத் முடித்துவிட்டு தாயகம்  திரும்பியபோது இங்கு 'ஆட்டிசம்' துறையில் வேலை வாய்ப்புகள் கிடைக்காததால் பாலர் பள்ளி ஆசிரியராக பணிப்புரிந்து கொண்டே பகுதி நேரமாக 'ஆட்டிசம்' கல்வியை தனிபட்ட முறையில் மேற்கொண்டேன்.

மனவளம் குன்றிய குழந்தைகளின் இல்லத்திற்கு நேரடியாக சென்று  1டூ 1 முறையில் 'ஆட்டிசம்' பயிற்சியை கற்பித்தேன்.

தங்களை யாரென உணர்ந்திராத  குழந்தைகளிடம் சிறு சிறு மாற்றங்களை தெரிய வந்த பின்னர் அது அப்பிள்ளைகளின் பெற்றோரிடம் அளவில்லா மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

பெற்றோர்களின் சிபாரிசின் பேரில் ஆட்டிசம் பயிற்சி கற்றுக் கொள்ள அதிகமானோர் தங்களது குழந்தைகளை அழைத்துக் கொண்டு வந்தனர்.
இக்குழந்தைகளுக்கான சிறப்பு பள்ளியை நடத்திட  சமூக இலாகாவின் உதவியை நாடினேன். ஆனால் பல விதிமுறைகளை காட்டி  மேற்கல்வியை தொடர வேண்டும் என பதிலளித்தனர்.

இத்துறையில் சிறந்த ஆசிரியராக திகழ வேண்டும் என்பதாலேயே பகுதி நேரமாக குழந்தைகளுக்கு 'ஆட்டிசம்' கல்வியை போதித்து வருகிறேன்.

குழந்தைகள் கையால் செய்யும் செய்கைகளைக் கொண்டு அதற்கேற்ப 'ஆட்டிசம்' கல்வியை பயிற்றுவித்து வருகிறேன். இத்தகைய குழந்தைகளிடம் கடினமாகவோ இயல்பாகவோ நடந்து கொள்ள முடியாது. மாறாக அவர்களிடம் மிகவும்  கனிவாகவும் அன்பாகவும் மட்டுமே அணுக முடியும். அதுதான் அவர்களை இயல்பு வாழ்க்கைக்கு கொண்டு வரும் முதல் அணுகுமுறையாகும்.

தொடரும்....

No comments:

Post a Comment