Thursday 22 March 2018

கையாளும் யுக்தி அறிந்தால் சிறப்பு குழந்தைகள் வாழ்வை சீர்படுத்தலாம்- ஶ்ரீ சாய் பிரியா


புனிதா சுகுமாறன்

புக்கிட் மெர்தாஜம்-
சாதாரண குழந்தைகளை போல் அல்லாமல் வாழும் சிறப்பு குழந்தைகளின் வாழ்க்கைச் சூழலை மாற்றியமைக்கும் மிகப் பெரிய பொறுப்பு பெற்றோரிடமே உள்ளது. ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்டுள்ள சிறார்களின் வாழ்க்கை முறையை மாற்றியமைக்க பெற்றோர்கள் முன்னெடுக்கும் முயற்சியே  அதன் ஆக்கப்பூர்வ தீர்வாகும் என்கிறார் சிறப்பு குழந்தைகளுக்கு பயிற்சிகளை வழங்கும் ஶ்ரீ சாய் பிரியா.

சிறப்பு குழந்தைகளை எல்லோராலும் பராமரித்து விட முடியாது. அதற்கான பயிற்சிகளை பயின்றவர்களை முறையாக பயிற்றுவிக்க முடியும் என்பதை பெற்றோர்கள் உணர்ந்து அவர்களை உரியவர்களிடம் சேர்க்க வேண்டும்.

ஶ்ரீ சாய் பிரியாவுடன்  'மை பாரதம்' மேற்கொண்ட நேர்காணலின் தொடர்ச்சி இங்கே தொகுக்கப்பட்டுள்ளது.

கே: ஆட்டிசம் சிறார்களை கையாளும் யுக்திகள்?

: Applying behavior analysis (ஏபிஎம்) எனப்படும் நன்னடத்தை ஆய்வு செயல்முறை கல்வியைத் தொடர்ந்தவர்களுக்கு நிச்சயம் சிறார்களை கையாளும் யுக்திகள் நன்கு தெரியும். அந்த வகையில், ஓர் ஆசிரியராக சிறார்களின் பழக்க வழக்கங்களை நன்கு அறிந்து அவர்கள் எளிதில் புரியும் வகையில் எளிய முறையில் பாடங்களை போதித்து வருகிறேன்.

ஏபிஎம் கல்வித் திட்டத்திற்கு ஏற்றாற்போல் இளஞ்சிட்டுகளுக்கு கல்வியைப் போதித்து வருவது மட்டுமில்லாமல் மன ரீதியாகவும் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட முயல்கின்றேன்.  அந்த சிறார்களின் மனரீதியிலான மாற்றமே பெரிய  வெற்றியாகவே கருதுகிறேன். ஏபிஎம் மூலம் அவர்களின் நடவடிக்கைகளையும் அறிந்து கொள்கிறேன்.

கே: இத்தகைய சிறார்களின்  பெற்றோர்கள் எவ்வாறு ஒத்துழைப்பு அளிக்கின்றனர்?

:  'ஆட்டிசம்' நோயால் பாதிக்கப்பட்டுள்ள சிறார்கள் எதிர்காலத்தை சிறப்பாக அமைத்து கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் பெற்றோர்களிடம் மேலோங்கி நிற்கிறது. அதனடிப்படையில் அவர்கள்  எனக்கு நல்ல ஒத்துழைப்பு வழங்கிவருகின்றனர்.

இந்த சிறார்கள்  என்னுடைய கண்காணிப்பில் விடும்போது நிறைய குறைகளோடு விடப்படுகின்றனர். அதன் பிறகு நான் அவர்களுக்கு ஆட்டிசம் கல்வியை மெற்கொண்ட பிறகு  இரண்டு மாதத்திலேயே  சிறார்களின் நடவடிக்கைகளில் மாற்றத்தை காணும் பெற்றோர், நான் கற்று தரும் வழிமுறைகளை கண்டறிந்துகின்றனர்.

'பணம் கொடுத்தால் குழந்தைகளை பார்த்துக் கொள்வார்' என  நிலை இல்லாமல் சிறப்பு சிறார்களின் நடவடிக்கைகளை புரிந்து கொண்டு அவர்களையும் சாதாரண மனிதர்களை போல் தங்கள் வாழ்க்கையை நகர்த்திட பயிற்சிகளை வழங்கி வருகிறேன். சிறப்பு குழந்தைகளின் சூழலுக்கு ஏற்ப என்னை மாற்றி கொள்வதால் அந்த சூழல் மகிழ்ச்சிகரமானதாக அமைந்துள்ளது.

கே: உங்களின் சிறார் பராமரிப்பு இல்லத்தை பற்றி?

: எனக்கென்று ஓர்  அடையாளம் வேண்டும் என்பதாலும் சிறப்பு சிறார்களுக்கு  கற்றல் கற்பித்தலை போதிப்பதில் அதிகம் ஆர்வம் உள்ளதால் 'Pusat Jagaan Kanak-Kanak" சிறார் பராமரிப்பு இல்லத்தை  வழிநடத்தி வருகிறேன்.
 எனது அடுத்த கட்ட நடவடிக்கை என்னவென்றால் தற்போதுள்ள சிறார் பராமரிப்பு இல்லத்தின் அருகில் சிறப்பு குழந்தைகள் இல்லம் அமைக்க வேண்டும் என்பதே எனது அடுத்தக்கட்ட நடவடிக்கையாகும். அதற்கான வேலைகளில் இறங்கிவிட்டேன். இன்னும் சில  ஆண்டுகளில் சிறப்பு குழந்தைகள் இல்லத்தை திறப்பு விழா செய்வேன் என்ற நம்பிக்கை ஆழமாக உள்ளது.

சிறப்பு குழந்தைகளை கண்காணிக்கும் பொறுப்பை சரியான நபர்களிடம் ஒப்படைக்க வேண்டும். அதேசமயம் தனிநபராக அனைத்து பணிகளையும் செய்ய இயலாது. தற்போது நான் வழிநடத்தி வரும் சிறார் பராமரிப்பு இல்லத்தில் உள்ள குழந்தைகள் சராசரியான குழந்தைகள். இவர்களை கண்காணிப்பது ஒரு பெரிய விஷயம் கிடையாது. ஆனால் சிறப்பு குழந்தைகள் அப்படியல்ல. அவர்களை கன்காணிப்பவர்கள் அன்பானவர்களாகவும் பொறுமை வாய்ந்தவர்களாகவும் இருப்பத மிகவும் அவசியம்.

நான் கற்ற கல்வியானது சிறப்பு குழந்தைகளின் வாழ்க்கை நடைமுறையை மாற்றி அமைக்க வேண்டும். அவர்களும் மற்ற மனிதர்களை போல் சராசரியாக இருக்க வேண்டும் என்பதே என்பதுதான் எனது குறிக்கோள்,
சிறப்பு குழந்தைகள் உள்ள பெற்றோர்கள் 'அவர்கள் குழந்தைகள் மற்ற குழந்தைகள் போல் இல்லையே. என்று கவலைப்படாமல் அவர்களுக்கான பயிற்சியை வழங்குவதை முன்னெடுக்க வேண்டும். நான் கற்று தரும் பயிற்சியின் மூலம் மூன்றே மாதங்களில் அவர்களிடையேயான  மாற்றத்தை சம்பந்தப்பட்ட சிறார்களின் பெற்றோர் காணலாம்.

- நன்றி- 

No comments:

Post a Comment