Thursday 8 March 2018

குடிநீர் சேவை துண்டிப்பால் சிரமத்திற்கு உள்ளான தீயணைப்புப் படையினர்



போர்ட் கிள்ளான் -
சிலாங்கூர் மாநிலத்தின் சில இடங்களில் குடிநீர் விநியோக தடை ஏற்பட்டுள்ளதால் தீயணைப்புப் படை வீரர்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளனர்.

இன்று காலை 10 மணியளவி ஏற்பட்ட தீ விபத்தில் 50 ஆண்டுகளுக்கும் பழைமையான 5 இரட்டை மாடி கடை வீடுகள் தீயில் எரிந்து சேதமடைந்தன. இதில் உயிரிழப்பு சம்பவங்கள் ஏதும் நிகழவில்லை.

இச்சம்பவம் குறித்து விவரித்த நடவடிக்கை குழுத் தலைவர் நட்ஸரி மஸ்யானி கூறுகையில், இந்த கட்டடத்தில் ஏற்பட்ட தீயை அணைக்க பெரும் சிரமங்களை எதிர்கொண்டோம்.

'தீயை அணைப்பதில் அனுபவம் இருந்தாலும் வட துறைமுகத்திலிருந்து வந்த இரு கொள்கலனில் விநியோகிக்கப்பட்ட நீரை கொண்டு தீயை அணைத்தோம் என்றார்.

இந்த தீயை 40 நிமிடங்களில் அணைத்தோம் என அவர் சொன்னார்.

No comments:

Post a Comment