Wednesday 7 March 2018

பக்காத்தான் கூட்டணியில் ஹிண்ட்ராஃப், நியூ ஜென் பார்ட்டி


கோலாலம்பூர்-
நம்பிக்கைக் கூட்டணியின் (பக்காத்தான் ஹராப்பான்) வியூக பங்காளி கட்சிகளாக ஹிண்ட்ராஃப், நியூ ஜெனரேஷன் கட்சியும் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக அக்கூட்டணியின் அவைத் தலைவர் துன் டாக்டர் மகாதீர் தெரிவித்துள்ளார்.

வரும் 14ஆவது பொதுத் தேர்தலில் இந்திய வாக்காளர்களை கவர்ந்திழுக்கும் வகையில் இவ்விரு கட்சிகளும் இக்கூட்டணியில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.

இக்கூட்டணியில் ஏற்கெனவே 4 கட்சிகள் இடம்பெற்றுள்ள நிலையில் தொகுதி பங்கீடுகளும் நிறைவு பெற்றுள்ள சூழலில் இவ்விரு கட்சிகளுக்கும் இடமளிக்கும் வகையில் சிறப்பு சலுகைகள் வழங்கப்படுவதற்கான வழிமுறைகள் கண்டறியப்பட வேண்டியது அவசியமாகிறது என்றார் அவர்.

இதனிடையே, வரும் பொதுத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியுடன் பணியாற்றுவது தொடர்பில் ஹிண்ட்ராஃப், நியூ ஜென் பார்ட்டி ஆகியவை விருப்பம் தெரிவித்ததன் அடிப்படையில் வியூக பங்காளி கட்சிகளாக இடம்பெற்றுள்ளன.

No comments:

Post a Comment