Saturday 10 March 2018

ஏப்ரலில் மலேசியாவுக்கு வருகிறாரா ரஜினிகாந்த்? அது உண்மையில்லை


பெட்டாலிங் ஜெயா-

'காலா' பட விளம்பர முன்னோட்டத்திற்காக நடிகர் நஜினிகாந்த் ஏப்ரல் மாதம் கோலாலம்பூருக்கு வருகை புரியவுள்ளார் என வெளியாகியுள்ள தகவலில் உண்மையில்லை என 'மாஸ் ரன்  2018' ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது.

'மாஸ் ரன் 2018'க்காக நடிகர் ரஜினிகாந்த் மலேசியாவுக்கு வருகை புரியவுள்ளார் என்பது தவறான தகவலாகும்.

ஏப்ரல் 1ஆம் தேதி நடைபெறும் ஓட்டப் பந்தய நிகழ்வில் நடிகர் ரஜினிகாந்த்  பங்கேற்கவுள்ளார் என உள்ளூர் ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டது.

அவருடன் 'காலா' பட நடிகர்களான ஹூமா குரேஷி, நானா படேகர், அஞ்சலி பட்டேல், சுகன்யா, சமுத்திரகனி ஆகியோரும் வருகை புரியவுள்ளதாக கூறியது.

"ரஜினிகாந்த் மலேசியாவுக்கு வரவில்லை; அது தவறான தகவல்' என மராத்தோன் மலேசியா இயக்குனர் பிரகாஷ் கோபால் கூறினார்.

No comments:

Post a Comment