Thursday 22 March 2018

யோகேந்திரபாலனுக்கு 'சீட்' கொடுப்பதை தேமு பரிசீலிக்க வேண்டும்- ஶ்ரீஹரி வேண்டுகோள்


ரா.தங்கமணி

சுங்கை சிப்புட்-
நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலில் சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ளூர் வேட்பாளர் களமிறக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வரும் வேளையில் அந்த வாய்ப்பு இங்கு மக்கள் சேவையாற்றி வரும் தொழிலதிபர் யோகேந்திரபாலனுக்கு வழங்கப்பட வேண்டும் என சுங்கை சிப்புட் எம்ஜிஆர் சமூக சேவை மன்றம் கோரிக்கை விடுத்துள்ளது.

கடந்த இரு தவணைகளாக எதிர்க்கட்சியிடம் வீழ்ந்து கிடக்கும் சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியை இத்தேர்தலில் தேசிய முன்னனி மீட்டெடுக்க வேண்டும் என்ற நிலையில் உள்ளூர் வேட்பாளருக்கு போட்டியிடும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.

எதிர்க்கட்சியிடம் வீழ்ந்த இரு தவணைகளில் எவ்வித நன்மைகளும் சேவைகளும் இல்லாமல் மக்கள் அவதியுறும் நிலையில் அந்த குறையை போக்கும் வகையில் இங்கு மக்களுக்கான சேவையை மேற்கொண்டு வருகிறார் யோகேந்திரபாலன் என்கிறார் இம்மன்றத்தின் தலைவர் வே.ஶ்ரீஹரி கூறினார்.

சமூகநலப் பிரச்சினை, அடிப்படை பிரச்சினை, தனிநபர் பிரச்சினை என பல பிரச்சினைகளுக்கு கொஞ்சம் சலனமில்லாமல் தீர்வு கண்டு வருகிறார் யோகேந்திரபாலன்.

'மக்களோடு  மக்களாக' இருந்து மக்கள் பணியில் தீவிரமாக களமிறங்கி சேவை செய்து வரும் யோகேந்திரபாலன், இங்குள்ள இந்திய சமுதாயம் மட்டுமல்லாது அனைத்து இன மக்களிடமும் களமிறங்கி சேவை செய்து வருகிறார்; நற்பெயரையும் சம்பாதித்துள்ளார்.

குறிப்பாக சீனர்களின் பொது இயக்கங்களின் நிகழ்வுகளிலும் பங்கேற்று வருவதால் சீன சமூகத்தின் ஆதரவும் இவருக்கு கிடைத்து வருகிறது.

யோகேந்திரபாலனுக்கான மக்கள் ஆதரவு இங்கு அதிகமான பெருகி வரும் சூழலில் அவரையே இங்கு வேட்பாளராக களமிறக்க தேசிய முன்னணி தலைமைத்துவம் பரிசீலிக்க வேண்டும்.

வெற்றி பெறும் வேட்பாளரையே பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக்கும் தேசிய முன்னணியும் விரும்புகின்ற சூழலில் யோகேந்திரபாலனுக்கு 'சீட்'  கொடுத்தால் இங்கு தேமு நிச்சயம் வெற்றி பெறும் என ஶ்ரீஹரி குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment