Tuesday 6 March 2018

போலியான செய்திகளை தடுக்க புதிய சட்டம்; அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு மாமன்னர் ஆதரவு

கோலாலம்பூர்-
சமூக  ஊடகங்களில் பகிரப்படும் போலியான செய்திகளை தடுக்கும் நடவடிக்கையாக புதிய சட்டம் கொண்டு வரும் அரசாங்கத்தின் எண்ணத்திற்கு மாமன்னர் சுல்தான் முகமட் வி ஆதரவு வழங்கியுள்ளார்.

'சமுதாயத்தில் நல்ல பழக்க வழக்கங்களையும் ஒழுக்க நெறிகளையும் பாதுகாப்பதில் அனைவரும் தங்களின் பங்களிப்பை வழங்க வேண்டும்'.

'எனவே போலியான செய்திகளை தடுக்க, புதிய சட்டங்களை உருவாக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு எனது முழு ஆதரவை தெரிவித்துக் கொள்கிறேன்' என இன்று13ஆவது நாடாளுமன்றத்தின் ஆறாவது தவணை முதல் கூட்டத்தை தொடக்கி வைத்து பேசுகையில் மாமன்னர் சுல்தான் முகமட் வி தெரிவித்தார்.

No comments:

Post a Comment