Saturday 10 March 2018

எஃகு தூண்கள் சரிந்ததில் ஒருவர் மரணம்; ஐவர் படுகாயம்


கோலாலம்பூர்-
பலத்த காற்று வீசியதன் காரணமாக எஃகு தூண்கள் சரிந்ததில் ஓர் ஆடவர் உயிரிழந்ததோடு ஐந்து பேர் கடுமையாக காயமடைந்தனர்.

இச்சம்பவம் இன்று காலை 10.10 மணியளவில் புக்கிட் பெருந்தோங் தொழிற்பேட்டை வளாகத்தில் நிகழ்ந்தது. இவ்விபத்தில் வங்காளதேச, இந்தோனேசிய நாட்டவர்கள் பாதிக்கப்பட்டனர்.

இதில் பாதிக்கப்பட்டவர்கள் 24 வயது முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர்.

இச்சம்பவத்தை நேரில் பார்த்தவரான சர்திஸ் என்பவர் கூறுகையில், பலமான காற்று வீசியபோது மிகப் பெரிய சத்தத்துடன் எஃகு தூண்கள் தொழிலாளர்கள் மீது சரிந்து விழுந்தன.

நான் அவர்களை எச்சரிக்க உரக்க கத்தியபோதும் காலதாமத்தால் விபரீதம் நிகழ்ந்தது என்று கூறினார்.

No comments:

Post a Comment