Sunday 18 March 2018

சுங்கை சிப்புட்டில் வேள்பாரியே வேண்டும்- கோரிக்கை வலுக்கிறது

ரா.தங்கமணி

சுங்கை சிப்புட்-
சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் டத்தோஶ்ரீ வேள்பாரியே வேட்பாளராக களமிறக்கப்பட வேண்டும். அப்போதுதான் இங்கு தேசிய முன்னணியின் வெற்றி வாய்ப்பு உறுதி செய்யப்படும் என 80ஆம் ஆண்டு பள்ளி நண்பர்கள் கூட்டுறவுக் கழகம் வலியுறுத்தியது.

மஇகாவின் முன்னாள் தேசியத் தலைவர்கள் அலங்கரித்த இத்தொகுதியை கடந்த இரு தவணைகளாக எதிர்க்கட்சி வசம் வீழ்ந்தது. ஆனால் இம்முறை இத்தொகுதியை மீட்டெடுக்க வேண்டுமானால் மக்களுக்கு நன்கு அறிமுகமானவரே வேட்பாளராக களமிறக்க வேண்டும் என அதன் தலைவர் உதயகுமார் மருதபிள்ளை கூறினார்.

தற்போது மஇகாவின் ஒருங்கிணைப்பாளராக களமிறங்கியுள்ள டத்தோ சோதிநாதனை இங்குள்ள எத்தனை பேர் அறிந்து வைத்துள்ளனர்? அவர் யார் என்பதே தெரியாத சூழலில் வேட்பாளராக களமிறக்கினால் அது தேசிய முன்னணிக்கு பாதகமாக அமையலாம்.

இந்த தேர்தல் கடுமையான போட்டியை உருவாக்கியுள்ள நிலையில் மக்களுக்கு அறிமுகமே இல்லாதவர்களை வேட்பாளராக களமிறக்குவது நியாயமாகாது.

மஇகாவில் பொருளாளராக பதவி வகிக்கும் டத்தோஶ்ரீ வேள்பாரி, துன் சாமிவேலுவின் புதல்வராக இருக்கும் நிலையில் இன்னும் சுங்கை சிப்புட் தொகுதியில் சாமிவேலுவுக்கான செல்வாக்கு உள்ளதால் வேள்பாரி எளிதாக வெற்றி பெற முடியும்.

வேள்பாரி, மஇகா இளைஞர் பிரிவுத் தலைவர் டத்தோ சி.சிவராஜ் ஆகியோர் இங்கு வேட்பாளராக களமிறக்கப்பட்டால் வெற்றி வாய்ப்பு பிரகாசம் என உதயகுமார், துணைத் தலைவர் கருணாநிதி ஆறுமுகம், உதவி செயலாளர் விஜேந்திரன் கிருஷ்ணன், செயலவை உறுப்பினர்கள் சத்தியமூர்த்தி மனோகரன், ஜீவநாதன் ராமசாமி ஆகியோர் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment