Tuesday, 20 March 2018
தேமு வேட்பாளர் பட்டியல் முன்கூட்டியே அறிவிக்கப்படும்- பிரதமர் நஜிப்
சிட்னி-
நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலில் போட்டியிடக்கூடிய தேசிய முன்னணி வேட்பாளர் பட்டியல் முன்கூட்டியே அறிவிக்கப்படும் என பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் கூறியுள்ளார்.
ஒரு தொகுதியில் காணப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையிலும் தயார் நிலையில் இருப்பதற்கும் வேட்பாளர் பட்டியல் முன்கூட்டியே அறிவிப்பது ஏற்றதக்கதாகும்.
ஒவ்வொரு தேர்தலை போலவே இந்த தேர்தலுக்கும் 2 அல்லது 3 நாட்களுக்கு முன்னதாகவே வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என டத்தோஶ்ரீ நஜிப் கூறினார்.
ஒவ்வொரு தொகுதியிலும் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் இன்னமு ஆய்வு செய்யப்படுகின்ற நிலையில் இறுதி முடிவு எடுக்கப்படும் வரை ஏதும் அறிவிக்கப்படாது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment