ஆலய இடமாற்றம், குண்டர் கும்பலின் அராஜகம், இந்தியர்கள் மீது தாக்குதல் என பரபரப்பாக காணப்பட்ட சீபில்ட் ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலயம் தற்போது சுமூக நிலைக்கு திரும்பியுள்ளது.
கடந்த மாதம் 26ஆம் தேதி 200 பேர் அடங்கிய கும்பல் ஒன்று ஆலயத்தில் இருந்த இந்தியர்கள் மீது தாக்குதல் நடத்தியது மிக பெரிய அளவில் பரபரப்பாக பேசப்பட்டது.
தாக்குதல்காரர்கள் மீது போலீசார் மேற்கொண்ட துரித நடவடிக்கை, கலக தடுப்புப் பிரிவினரின் அதிரடி, அமைச்சர்கள், ஆட்சிக்குழு உறுப்பினர், மந்திரி பெசார் ஆகியோரின் தீர்க்கமான முடிவு ஆகியவற்றின் காரணமாக இவ்வாலய விவகாரம் சுமூக நிலைக்கு திரும்பியுள்ளது.
உள்ளூர் ஊடகங்கள் இன்னும் தீர்க்கமாக கவனித்து இவ்வாயல நிலவரத்தை போலீசார் இன்னமும் கண்காணித்து வருகின்றனர்.
No comments:
Post a Comment