கோலாலம்பூர்-
தங்களது முதலாளிகளால் தொழிலாளர்கள் வேலையிலிருந்து நீக்கப்படுவது கடந்தாண்டைக் காட்டிலும் இவ்வாண்டு குறைந்துள்ளது என்று மனிதவள அமைச்சர் எம்.குலசேகரன் தெரிவித்தார்.
இவ்வாண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் செப்டம்பர் 30ஆம் தேதி வரை முதலாளிமார்களால் வேலையிலிருந்து 15,903 தொழிலாளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
இது கடந்தாண்டை காட்டிலும் மிகக் குறைவானது. இதே காலாண்டில் கடந்தாண்டு 31,945 தொழிலாளர்கள் வேலையிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர் என்று குலசேகரன் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment