Thursday 26 October 2017

மருத்துவமனைகளில் மருந்து பற்றாக்குறை; 'நிதி' பிரச்சினையல்ல- டத்தோஶ்ரீ சுப்பிரமணியம்


கோலாலம்பூர்-
நாட்டிலுள்ள சில அரசாங்க மருத்துவமனைகளில்  மருந்துகள் பற்றாக்குறை நிலவுவதற்கு 'பணம்' ஒரு பிரச்சினையல்ல; மாறாக அதை விநியோகிப்பதிலேயே பிரச்சினை என சுகாதார அமைச்சர் டத்தோஶ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் தெரிவித்தார்.

சில மருத்துவமனைகளில் குறிப்பிட்ட சில மருத்துகள் பற்றாக்குறை நிலவுவது உண்மைதான். ஆனால் அது விநியோகம் செய்வதில் ஏற்பட்டுள்ள தாமத்தினால்தான் ஏற்பட்டுள்ளது.

இதுபோன்று மருந்து பற்றாக்குறை நிலவும்போது தங்களது நிலைக்கு ஏற்ப பிற மருத்துவமனைகள் மருந்துகளை வழங்குவதில் ஆதரவாக இருக்க வேண்டும் எனவும் சில மருந்துகங்களும் சேமிப்பு கிடங்கில் வைத்துள்ள மருந்துகளை வழங்கி உதவலாம் எனவும் அவர் ஆலோசனை கூறினார்.

பட்டியலிடப்பட்டுள்ள மருந்துகளை  சில நிறுவனங்களை விநியோகம் செய்யாததால் அதற்கு மாற்று மருந்துகளை மருத்துவர்கள் வழங்குகின்றனர். இதனால் அரசாங்கத்திடம் மருந்துகள் இல்லை என மக்கள் தவறான புரிதலை கொண்டுள்ளனர் என யயாசான் ஸ்டென்டர்ட் சார்ட்டட், சுகாதார அமைச்சு ஆகியவற்றுக்கிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்த கையெழுத்து நிகழ்வுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் இவ்வாறு  சொன்னார்.

No comments:

Post a Comment