Friday 27 October 2017

புயல்காற்று: ஈப்போ டோல் சாவடி சேதம்

ஈப்போ-
இங்கு கடுமையாக வீசிய புயல்காற்றினால் ஈப்போ டோல் சாவடியின் கூரைகள்  சரிந்து விழுந்து பெரும் சேதம் ஏற்பட்டது. இன்று மாலை 5.50 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் வடக்கு நோக்கி செல்லும் நான்கு வழி சாலைகள் மூடப்பட்டன.

இந்த சம்பவத்தில் எவ்வித விபத்துகளும்  காயங்களும் ஏற்படவில்லை என குறிப்பிட்ட பிளஸ் மலேசியா நிறுவன பேச்சாளர் ஒரு கட்டாய சூழலில் நான்கு வழி சாலைகள் மூடப்பட்டன எனவும் அங்கு துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் இரவு 7.00 மணியளவில் மூடப்பட்ட இரு பாதைகள் போக்குவரத்துக்கு திறந்து விடப்பட்டன எனவும் அவர் கூறினார். இச்சம்பவத்தினால் அங்கு வாகன நெரிசல் நிலவியது.

No comments:

Post a Comment