Monday 23 October 2017

தீவிபத்தில் வீட்டை இழந்தார் மோகன்; உதவிக்கரம் நீட்டியது அபிராம் இயக்கம்

ரா.தங்கமணி

பாகான் செராய்-
கடந்த இரு தினங்களுக்கு முன்னர் ஏற்பட்ட தீச்சம்பவத்தில் குடியிருந்த வீட்டை இழந்த மோகன் கண்ணையா குடும்பத்தினருக்கு மலேசிய அபிராம் சமூகநல இயக்கத்தினர் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர்.

ஜாலான் ஜெட்டி, கம்போங் தெலுக் எனுமிடத்தில் நிகழ்ந்த இந்த தீச்சம்பவத்தில் கோப்பி தூள் கிடங்கும், அதனையொட்டி அமைந்திருந்த ஏழு வீடுகளும் 11 வாகனங்களும் தீயில் அழிந்தன.
இத்தீச்சம்பவத்தில் உயிருடற்சேதம் ஏதும் நிழாத சூழ்நிலையில் வீட்டை இழக்க வேண்டிய சூழலை பலர் எதிர்கொண்டனர். இதில் கட்டிய துணியுடன் உயிர் தப்பிய மோகனின் குடும்பத்தினருக்கு அடைக்கலம் வழங்கினார் பாகான் செராய் அபிராம் சமூகநல இயக்கத்தின் தலைவர் எம்.எஸ்.மணியம்.

மோகன், அவரின் துணைவியார் திருமதி தெய்வானை முனியாண்டி, இரண்டரை வயது மகன் தர்ஷன் ஆகியோரை தனது தையல் கடையில் தற்காலிகமாக தங்குவதற்கு எம்.எஸ்.மணியம் அடைக்கலம் வழங்கினார்.
எம்.எஸ்.மணியத்தின் இந்த நடவடிக்கையை பாராட்டிய மலேசிய அபிராம் சமூகநல இயக்கத்தின் தேசியத் தலைவர் சண்முகம் கிருஷ்ணன், மோகனின் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கியதோடு 3 மாதத்திற்கு வேண்டிய உணவுப் பொருட்களை வழங்குவதாக உறுதி அளித்தார்.

நிபோங் திபால்  அபிராம் சமூகநல இயக்கத்தின் தலைவர் ரவி, அவரின் துணைவியார், செயலாளர் குமாரி நளினி ஆகியோர் மோகனின் குடும்பத்தினரை சந்தித்ததோடு உதவிப் பொருட்களையும் பணவுதவியும் வழங்கினர்.

பாகான் செராய் அபிராம் இயக்கத்தின் பொருளாளர் ராஜேஸ்வரி, எம்ஜிஆர் தேவன், அசோகன் உட்பட நண்பர்கள் ஒன்றிணைந்து பாகான் செராய் தமிழ்ப்பள்ளி, அலாங் இஸ்கண்டார் இடைநிலைப்பள்ளியைச் சேர்ந்த முன்னாள் மாணவர்களிடம் வசூலித்த 620 வெள்ளியை மோகனிடம் ஒப்படைத்தனர்.
மேலும், பாகான் செராய் அபிராம் இயக்கத்தின் உறுப்பினர் கோபி சமையல் எரியாவு அடுப்பு வழங்கி உதவிக்கரம் நீட்டினார்.
பாரிட் புந்தார் அபிராம் இயக்கத்தின் தலைவர் செல்வகுமார், ராஜமணி, வேலு ஆகியோர் பொருள், பணவுதவி வழங்கினர்.

No comments:

Post a Comment