Monday 2 October 2017

14ஆவது பொதுத் தேர்தல்: இவ்வாண்டு இல்லை?

கோலாலம்பூர்-
அம்னோவின் பொதுப் பேரவை டிசம்பர் 5ஆம் தேதி நடைபெறுவதை பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் உறுதிப்படுத்தியுள்ளதால் நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தல் இவ்வாண்டு நடைபெற வாய்ப்புள்ளது என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலை முன்னிட்டு அம்னோ பொதுப் பேரவை ஒத்தி வைக்கப்படலாம் என இதற்கு முன்பு கூறப்பட்ட வேளையில், இவ்வாண்டு பொதுத் தேர்தல் நடைபெறலாம் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியிருந்தது.

ஆனால் டிசம்பர் 5ஆம் தேதி அம்னோவின் பொதுப் பேரவையை பிரதமர் நஜிப் உறுதிபடுத்தியுள்ளதால் இவ்வாண்டு பொதுத் தேர்தல் இல்லை என்பது தெளிவாகிறது.

இதனிடையே, நாட்டின் 14ஆவது பொதுத்தேர்தல் அடுத்தாண்டுதான் நடைபெறும் என துன் மகாதீர் ஆரூடம் கூறியிருந்தார். சபா, சரவாக்கில் தங்களின் செல்வாக்கை அதிகரித்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் தேசிய முன்னணிக்கு தேவைப்படுவதாலும், அதற்குரிய கால அவகாசம் அவர்களுக்குத் தேவைப்படுவதாலும், பொதுத் தேர்தல் அடுத்தாண்டுதான் நடைபெறும் என மகாதீர் இதற்கு முன்பு கூறியிருந்தார்.

No comments:

Post a Comment