Thursday 26 October 2017

ஶ்ரீ கைலாசநாதன் ஆலயத்திற்கான புதிய நிலத்தை சீர் செய்யும் செலவை மாநில அரசே ஏற்க வேண்டும்

ஈப்போ-
ஜெலாப்பாங், கம்போங் பாரு ஸ்ரீ கைலாசநாதன் ஆலயத்தினை மாற்றும் புதிய இடத்தை சீர் செய்வதற்கு ஏற்படும் செலவை பேராக் மாநில அரசாங்கமே ஏற்க வேண்டும் என பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் வீ.சிவகுமார் வலியுறுத்தினார்.

சுமார் 50 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்த ஆலயம் இவ்வட்டர மக்களிடையே மிகவும் பிரசத்திப்பெற்ற ஆலயமாகும்.
தற்போது இந்த ஆலயம் அமைந்துள்ள இடத்திலும், அதனை சுற்றிலும் வீடமைப்பு திட்டம் நிறைவேற்றப்படவுள்ளதால் இந்த ஆலயத்தை வேறொரு இடத்திற்கு எடுத்துச் செல்லுமாறு பேராக் மாநில அரசாங்கம் கட்டளையிட்டுள்ளது.

இதற்கு மாற்று நிலமாக, ஜெலாப்பாங் மேரு தின் பகுதியில் ஏறக்குறைய 8,000 சதுர அடியில் ஒரு நிலத்தை ஒதுக்கியுள்ளது. தற்போது ஈப்போ மாநகர் மன்ற  ஒப்புதலுக்கு காத்திருப்பதாக தெரிகின்றது. ஒப்புதல் கிடைத்தவுடன் உடனடியாக மாற்றி செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது.

ஏறக்குறைய 8,000 சதுர அடியை கொண்ட இப்புதிய இடமானது மிகவும் பள்ளமாக உள்ளதால்  மழைக்காலங்ளில் வெள்ளப் பிரச்சனையை எதிர்கொள்ள நேரிடும் என்பது உறுதி.எனவே மண் நிரப்பி இப்பிரச்சினையை சரிசெய்து, தடுப்புச்சுவர் எழுப்புவதற்கு ஏறக்குறைய  200,000 வெள்ளி தேவைப்படுவதாக கணிக்கப்படுகின்றது.

ஆலயத்தினை உடனடியாக புதிய இடத்திற்கு மாற்றி செல்லுமாறு உத்தரவிடப்பட்டுள்ளதால், நிலத்தினை தயார்படுத்த செலவாகும் இப்பெரும் தொகையினை ஆலய நிர்வாகத்தினரால் சமாளிக்க இயலாது.

எனவே, உடனடியாக ஆலயத்தினை புதிய இடத்திற்கு மாற்றி செல்லுமாறு உத்தரவிட்டுள்ள பேராக் மாநில அரசாங்கமே நிலத்தினை தயார்படுத்த செலவுகளுக்கு பொறுப்பேற்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

No comments:

Post a Comment