Wednesday 11 October 2017

பினாங்கை வந்தடைந்த இந்திய போர் கப்பல்கள்; பினாங்கு முதல்வர் வரவேற்றார்

சுகுணா முனியாண்டி 

பட்டர்வொர்த்-
பினாங்கில் நான்கு இந்தியப் போர்க் கப்பல்கள் வந்துள்ளது . இந்திய போர் கப்பல்கள் பினாங்கு துறைமுகத்துக்கு வந்தடைந்ததை முன்னிட்டும் பிரமாண்ட வரவேற்பு வழங்கப்பட்டது.

இந்த வரவேற்பு நிகழ்வில்  பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங், பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர்  பி.இராசமாசாமி,  டத்தோ  முகமட்  இராஷிட்   பின் ஹாஸ்னோன், மலேசியாவுக்கான இந்திய தூதர்  திருமூர்த்தி ஆகியோர்  முக்கிய பிரமுகர்களாக கலந்துக் கொண்டனர்

கப்பல் டி.சுஜாதா, சுதர்ஷினி, ஷர்டுல் உட்பட ஐ.சி.ஜி.எஸ் சாரதிகள் அக்டோபர் 8 முதல் 12 வரை பினாங்கிற்கு வருகை தந்துள்ளனர்.  இந்திய போர்க்கப்பல்களின் இந்த வருகை  வெளிநாட்டு கடல், துறைமுகங்களில் அறிமுகம் செய்தல் மட்டுமின்றி  மலேசியாவிற்கும் இந்தியாவிற்கும் இடையில் நட்பை வளர்ப்பதற்கான பயிற்சி ஆகியவற்றை வெளிப்படுத்துவதன் நோக்கத்தை கொண்டதாகும் .

"இந்திய கடற்படையின் நான்கு கப்பல்களும் பட்டர்வொர்த் வருகை தந்தமைக்காக நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்தியக் கடற்படையின் இந்த வருகை இந்தியாவின் முக்கியத்துவத்தின் வெளிப்பாடு ஆகும்" என்று லிம் கூறினார்.
மலேசியாவிலுள்ள மாநிலங்களில் பினாங்கு மாநிலம் சரித்திரம் வாய்ந்த மாநிலமாகும். இந்திய பூர்வீக மக்கள் இங்குதான் முதலில் காலடி வைத்தனர். பினாங்கு மாநிலத்தில்தான் முதல் தமிழ்ப்பள்ளியும் தொடங்கப்பட்டது. இது போன்ற சரித்திரங்கள் தக்கவைத்துள்ள பினாங்கு மாநிலத்தின் நட்பினை கொணர போர் கப்பல் வந்துள்ளது பெருமைபடக்கூடிய ஒன்றாகும்  என தமதுரையில் அவர் தெரிவித்தார் .
இந்தியா நமது பூர்வீகம்.  அந்த பூர்வீக மக்களின் வாயிலாக மலேசிய கற்றுக் கொள்ள வேண்டியது நிறையவுள்ளது ,பினாங்கு இந்திய போர் கப்பலை வரவேற்கின்ற இன்றைய நாள் பினாங்கு வரலாற்றின் சரித்திர நாள் என பினாங்கு மாநில  துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமி குறிப்பிட்டார்.

1,000 ஆண்டுகளுக்கு முன்னல் சோழ மன்னன் கெடாவில் நங்கூரமிட்டு ஆட்சியை அமைத்தார், திறம்பட  ஆட்சியும் புரிந்தார். அதுபோன்ற சிறப்பன ஆட்சியும் ஜனநாயகமும்  மலேசியாவில் இல்லை என்றார்.  நாம் பூர்வீகத்தை நினைக்கும்போது ஒரு வீரமும் நேர்மையும் உடுருவிச் செல்கின்றது என்றும் இன்று பினாங்கில் நங்கூரமிட்டுள்ள கப்பல் போர் புரிவதற்காக அல்ல; பினாங்கு மாநிலத்துடனான நல்ல நட்புறவை வலுப்படுத்துவதற்காக என்றும் செய்தியாளர் சந்திப்பின் போது அவர் தெரிவித்தார் . .

இந்த விருந்தோம்பல் நிகழ்வு  போர் கப்பலில் பிரேத்தியேகமாக நடப்பெற்றது.  மாநில முதல்வருக்கு சிறப்பு செய்யப்பட்டன. ஆடல் பாடலுடன் நடைபெற்ற இந்நிகழ்வில்  இராமகிருஷ்ணா தமிழ்ப்பள்ளிக்கு இந்தியா நாட்டை சார்ந்த கதை புத்தகங்கள் வழங்கினர். ,செபெராங் பிறை நகராண்மை கழக உறுப்பினர்கள் டேவீட் மார்சல், சத்தீஸ் முனியாண்டி, ட்த்தோ சுப்பையா மாணிக்கம் உட்பட பல ஊடகங்கள் ,பிரமுகர்கள்  கலந்துக் கொண்டனர்.

No comments:

Post a Comment