Tuesday 24 October 2017

பொது போக்குவரத்துச் சேவையில் 84% பயனர்கள் மனநிறைவு- டத்தோஶ்ரீ நஜிப்

கோலாலம்பூர்-
தரை பொது போக்குவரத்து ஆணையம் மேற்கொண்ட சுயேட்சை ஆய்வில் 84 விழுக்காட்டினர் பொது போக்குவத்துச் சேவையில் மனநிறைவு கொண்டுள்ளனர் என பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் குறிப்பிட்டார்.

2015ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில் 2016ஆம் ஆண்டு பொது போக்குவரத்துச் சேவையை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 10% விழுக்காடு உயர்வு கண்டுள்ளது என ஆய்வு காட்டுகிறது.
ADVERTISEMENT

பொது போக்குவரத்துத் துறையில் மத்திய அரசாங்கம் முன்னெடுக்கும் திட்டங்கள் சரியான முறையில் தனது இலக்கை சென்றடைதை இது புலப்படுத்துகிறது என கேஎல்சிசியில்  2017ஆம் ஆண்டு தரை பொது போக்குவரத்து கண்காட்சியை  தொடக்கி வைத்து உரையாற்றுகையில் டத்தோஶ்ரீ நஜிப் இவ்வாறு கூறினார்.

 இவ்வாண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் மாதம் வரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தரை பொது போக்குவரத்து சேவையை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 12 விழுக்காடு உயர்ந்துள்ளது. இது 570,021இல் இருந்து 638,605ஆக பயனீட்டாளர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

தரை பொது போக்குவரத்துத் துறையில் அரசாங்கம் மேற்கொண்ட உருமாற்றத் திட்டங்களின்  வாயிலாக அதிகமான பயனீட்டாளர்கள் கவர்ந்திழுக்கப்பட்டுள்ளனர் என அவர் சொன்னார்.
ADVERTISEMENT

No comments:

Post a Comment