Friday 14 May 2021

14 ஆண்டுகளாக மரத்தடி வாழ்க்கை- மகாலெட்சுமி வாழ்வில் திருப்புமுனை ஏற்படுத்திய உஸ்தாத் எபிட் லியூ

 ரா.தங்கமணி 

கோலாலம்பூர்-

பரபரப்பான ஒரு சாலை, அதன் அருகே ஒரு மரம். அந்த மரத்தையே தனது இருப்பிடம். 14 ஆண்டுகளாக அந்த மரத்தின் வேரையே தனது படுக்கையாக மாற்றிக் கொண்ட ஒரு பெண்ணின் கண்ணீரை துடைத்துள்ளார் சமய போதகர் உஸ்தாத் எபிட் லியூ.

தனது அன்றாட வாழ்க்கைக்காக தள்ளுவண்டியில் பயன்படுத்தப்பட்ட உலோகப் பொருட்களை சேகரித்து வரும் அந்த மாது மரத்தடியில் படுத்துறங்குவதை கண்டுள்ளார் எபிட் லியூ.

அந்த மாதுவை சந்தித்து அளவளாவிய எபிட் லியூ, அம்மாதுவின் பெயர் திருமதி மகாலெட்சுமி என்பதும் சிறு அளவில் மறுசுழற்சி பொருட்களை விற்பனை செய்து வருவதாகவும் அவர் கூறியதாக தமது முகநூல் பதிவில் உஸ்தாட் எபிட் லியூ பதிவிட்டுள்ளார்.

தம்மிடம் மனம் விட்டு பேசிய மகாலெட்சுமி, தமக்கு திருமணம் நடந்ததையும் ஒரு  வாடகை வீட்டில் தங்கியிருந்ததாகவும் வாடகையை செலுத்த முடியாத நிலையில் அந்த வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டதாகவும் நினைவு கூர்ந்தார்.

ஒரு வாடகை வீட்டை பார்த்து தருவதாக தாம் கூறிய போதிலும் அதற்கு மறுப்பு தெரிவித்த அம்மாது, என்னை விட மோசமான நிலையில் உதவி தேவைபடுவோர் இருப்பர், அவர்களுக்கு உதவி செய்யுங்கள், நான் இன்னமும் ஆரோக்கியமாக உள்ளேன். உழைத்து சாப்பிடும் சக்தி உள்ளது. என்று மகாலெட்சுமி கூறினார்.

தொடர்ந்து தாம் வற்புறுத்திய நிலையில் வாடகை வீட்டிற்கு இணக்கம் தெரிவித்த மகாலெட்சுமிக்கு பெட்டாலிங் ஜெயா மெந்தாரி கோர்ட்டில்  வாடகைக்கு ஒரு வீட்டை எடுத்தோம்.

அந்த புதிய வீட்டின் சாவி கைக்கு வரும் வரையிலும் மகாலெட்சுமிக்கு புதிய ஆடைகள், வீட்டிற்கு தேவையான பொருட்கள், மளிகை பொருட்கள் ஆகியவற்றை வாங்கி கொடுத்தேன்.

தொடக்கத்தில் நான் ஏதோ தமாஷாக பேசுகிறேன் என நினைத்து விட்டார் மகாலெட்சுமி, பின்னர் அது உண்மை என உணர்ந்தபோது கண்ணீர் விட்டு அழுதார்.

மழை காலங்களில் ஒதுங்க இனி அங்கும் இங்கும் ஓட வேண்டியதில்லை.  நன்றிகடன் பட்டிருக்கிறேன் என உணர்ச்சிபொங்க கூறினார் மகாலெட்சுமி.

அந்த தள்ளுவண்டி, இதர பொருட்களுடன் அந்த புதிய வீட்டிற்கு அழைத்துச் சென்றது மிகப் பெரிய மகிழ்ச்சியை தந்தது என தமது பதிவில் எபிட் லியூ குறிப்பிட்டுள்ளார்.

உஸ்தாத் எபிட் லியூவின் இந்த மனிதாபிமானச் செயலை சமூக ஊடக பயனர்கள் பாராட்டி வரும் நிலையி 'பாரதம் மீடியா'வும் வாழ்த்துகிறது.

ஆனால் ஒரு கேள்வி. 14 ஆண்டுகளாக மரத்தடியையே தனது படுக்கையாக மாற்றி கொண்ட ஓர் இந்திய மாதுவுக்கு உதவிக்கரம் நீட்ட ஓர் ஆலயமோ ஓர் இந்து அமைப்புகளோ அங்கு இல்லாமலா போய்விட்டன? என்ற கேள்வி ஒவ்வோர் இந்தியனின் மனதுக்குள்ளும் எழ வேண்டும்.



No comments:

Post a Comment