ஷா ஆலம்-
இந்நாட்டிலுள்ள மூவினங்களின் போராட்டத்தின் அடையாளமே 'சுதந்திர தினம்' ஆகும். ஆதலால் இந்நாட்டிலுள்ள மக்களின் தியாகத்தை யாரும் கேள்வி எழுப்பக்கூடாது.
நாட்டின் 62ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் இவ்வேளையில் இந்த சுதந்திரம் சாதாரணமாக கிடைத்து விடவில்லை.
பலரது போராட்டங்களின் வலியிலும் சிந்திய குருதியிலும் தான் நமது சுதந்திர தாகம் நிஜமானது. இப்போராத்தில் இனம், மதம், மொழி கடந்து மலேசியராய் ஒன்றுபட்டதன் விளைவாலே சுதந்திரம் கிடைக்கப்பெற்றது.
இந்நிலையில் நாட்டு மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் சிலர் குந்தகமான கருத்துகளை பரப்பி வருகின்றனர்.
சிலரின் விரும்பதகாத இத்தகைய நடவடிக்கைகளுக்கு ஆட்படாமல் 'மலேசியர்' என்ற உணர்வோடு அனைத்து இன மக்களும் ஒருமித்த கருத்தோடு ஒன்றிணைந்து 'புதிய மலேசியா'வின் சுதந்திர காற்றை சுவாசிப்போம் என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் தமது சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment