Saturday 17 August 2019

குலசேகரன் மன்னிப்பு கோர வேண்டும்- ஸாகீர் நாய்க் நோட்டீஸ்

கோலாலம்பூர்-

தம் மீது களங்கம் ஏற்படுத்தும் வகையில் அறிகை வெளியிட்ட மனிதவள அமைச்சர் எம்.குலசேகரன் மன்னிப்பு கோர வேண்டும் என்று சர்ச்சைக்குரிய சமய போதகர் ஸாகீர் நாய்க் நோட்டீஸ் அனுப்பியிள்ளார்.
ஸாகீர் நாய்க்கை பிரதிநிதிக்கும் அக்பெர்டின் & கோ வழக்கறிஞர் அலுவலகத்திலிருந்த் புத்ராஜெயாவிலுள்ள மனிதவள அமைச்சர் அலுவலகத்திற்கு இந்த கடிதம் இன்று வழங்கப்பட்டது.

‘ஸாகீர் நாய்க் மலேசியாவில் இருப்பது அனைத்து மலேசியர்களுக்கும் சங்கடமாக உள்ளது’ எனும் தலைப்பில் உண்மைக்கு புறம்பாக அறிக்கை வெளியிட்ட குலசேகரன் அதற்காக மன்னிப்பு கோருவதோடு அந்த அறிக்கையை திரும்ப பெற வேண்டும். அதோடு இந்த சட்ட நடவடிக்கைக்கான நஷ்ட ஈட்டையும் அவர் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

48 மணிநேரத்திற்குள் குலசேகரன் மன்னிப்பு கோர வேண்டும் எனவும் இல்லையேல் நீதிமன்ற நடவடிக்கை குன்னெடுக்கப்படும் என்றும் வழக்கறிஞர் தரப்பு கூறியுள்ளது.

No comments:

Post a Comment