Friday 9 August 2019

4 துறைகளில் அந்நியத் தொழிலாளர் தருவிப்பு முடக்கம்

புத்ராஜெயா-
ஜவுளி, சலவை, முடி வெட்டுதல், தங்கநகை செய்தல் (பத்தர்) ஆகிய தொழில்துறைகளுக்கு அந்நிய நாட்டவர்களை தருவிப்பதை நிறுத்துவதற்கு உள்துறை அமைச்சும் மனிதவள அமைச்சும் ஒப்புக் கொண்டுள்ளன.
அந்நித் தொழிலாளர் நிர்வகிப்பு செயற்குழுவின் 3ஆவது கூட்டத்தில் கலந்தோசிக்கப்பட்டதன் அடிப்படையில் இம்முடிவு எடுக்கப்பட்டதாகவும் நாட்டின் பொருளாதார மேம்பாட்டில் உள்ளூர் மக்களுக்கும் முதன்மை வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என்ற நிலையிலும் இம்முடிவு எடுக்கப்பட்டதாக உள்துறை அமைச்சர் டான்ஶ்ரீ முஹிடின் யாசின், மனிதவள அமைச்சர் எம்.குலசேகரன் ஆகியோர் தெரிவித்தனர்,

இந்த துறைகளில் நிலவும் அந்நியத் தொழிலாளரை நிரப்பும் மாற்று நடவடிக்கை 2019 தொடங்கி 2021 வரை மூன்றாண்டுகளுக்கு நிறுத்தப்படுகிறது.

இத்துறைகளுக்கான அந்நியத் தொழிலாளர்கள் தருவிக்கப்படுவதை புத்ராஜெயா ஏன் நிறுத்திக் கொண்டது என்பது தமக்கு தெரியாது என்று கடந்த ஜூன் மாதம் குலசேகரன் கூறியிருந்தார்.

No comments:

Post a Comment