Thursday 15 August 2019

ஆஸ்ட்ரோவில் புதிய எச்.டி அலைவரிசைகள்


கோலாலம்பூர்-
 நாளை 15ஆம் தேதி தொடக்கம் ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்கள் ஸ்டார் விஜய், சன் டிவி அலைவரிசைகளின் உள்ளடக்கங்களைத் துல்லிய ஒளிபரப்பில் கண்டு மகிழலாம். அதை வேளையில், அண்மையில் மேம்படுத்தப்பட்ட தங்கத்திரை அலைவரிசை 241-யின் புதிய திரைப்படங்களைத் தற்போது எச்.டி-யில் கண்டு களிக்கலாம்


ஸ்டார் விஜய் எச்.டி (அலைவரிசை 232) மற்றும் சன் டிவி எச்.டி (அலைவரிசை 234) திரைப்படங்கள், நாடகங்கள், ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மற்றும் தொடர் நாடகங்கள் போன்ற உள்ளடக்கங்களை ஆஸ்ட்ரோ கோவிலும் இடம்பெறும். 

ஸ்டார் விஜய் எச்.டி-யில் சூப்பர் சிங்கர் சீசன் 7, பிக் பாஸ் சீசன் 3, பாண்டியன் ஸ்டோர்ஸ், மௌன ராகம், பாரதி கண்ணம்மா, எங்கிட்ட மோததே சீசன் 2 நிகழ்ச்சிகளும் சன் டிவி எச்.டி-யில் சன் சிங்கர், லட்சுமி ஸ்டோர்ஸ், ரோஜா, கல்யாண பரிசு, வள்ளி ஆகிய நிகழ்ச்சிகள் ஒளியேறுகின்றன.


அதுமட்டுமின்றி, ஆன் டிமாண்ட் சேவையை அணுகி ஸ்டார் விஜய் எச்.டி அலைவரிசை 232-யின் குறிப்பிட்ட உள்ளடக்கங்களையும் தங்கத்திரை அலைவரிசை 241-யில் இம்மாதம் ஒளியேறும் கேம் ஓவர்,  செவன், ராட்சசி, ஹவுஸ் ஓனர் ஆகிய திரைப்படங்களையும் கண்டு களிக்கலாம்


No comments:

Post a Comment