Wednesday 7 August 2019

‘காட்’ சித்திர மொழி; அரசு மீட்டுக் கொள்ள வேண்டும்- பத்மநாதன்

 ரா.தங்கமணி

ஷா ஆலம்-
அடுத்தாண்டு முதல் தமிழ்,சீனப் பள்ளிகளில் பயிலும் 4ஆம் ஆண்டு மாணவர்களுக்கு தேசிய மொழி பாடத்திட்டத்தில் 'காட்' சித்திர மொழி பயிற்றுவிக்கப்படுவதை கல்வி அமைச்சு மீட்டுக் கொள்ள வேண்டும் என்று ஸ்ரீ மூடா வட்டார இந்திய கிராமத் தலைவர் பத்மநாதன் வலியுறுத்தினார்.
காட் மொழி மதம் சார்ந்த ஒன்றல்ல; அது கலை வடிவம் கொண்ட பயிற்சியே ஆகும் என்று  சில அமைச்சர்கள் கூறினாலும், கலை வடிவம் கொண்ட பயிற்சியை தேசிய மொழி பாடத்திட்டத்தில் திணிக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது?

ஏற்கெனவே பல்வேறு பாடத்திட்டங்களால் மாணவர்கள் கடினமான சூழலை எதிர்கொண்டுள்ள நிலையில் இப்போது ‘காட்’ சித்திர மொழியை பயில வற்புறுத்துவது ஏற்புடையதல்ல.
அதே வேளையில் கடந்த பொதுத் தேர்தலின்போது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் கவனத்தை செலுத்த வேண்டுமே தவிர, இதுபோன்ற புதுப்புது பிரச்சினைகளை கிளப்பி விட்டு மக்களிடையே ஒரு குழப்பமான சூழலை உருவாக்கி விடக்கூடாது.

அநேகமான மக்கள் நல்லது செய்வோம் என்ற நம்பிக்கையிலேயே பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியை ஆட்சி அதிகாரத்தில் அமர்த்தினர். அந்த அதிகார மையத்தில் மக்களை குழப்பிக் கொண்டிருக்கக்கூடாது என்று அவர் வலியுறுத்தினார்.

No comments:

Post a Comment