Friday 9 August 2019

ஒருதலைபட்ச சிறார் மதமாற்றத்தை சிலாங்கூர் ஜசெக ஆதரிக்காது- கோபிந்த் சிங்

கோலாலம்பூர்-

தாய் அல்லது தந்தை ஒருவரின் சம்மதத்துடன் சிறார் மதமாற்றம் செய்வதை ஏற்கச் செய்யும் சட்ட மசோதாவை சிலாங்கூர் ஜசெக ஏற்காது என்று அதன் தலைவர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்தார்.
கூட்டரசு சட்டமைப்பில் உள்ள ஷரத்துகளை அமலாக்கம் செய்ய முடியும் என்ற நிலையில் திருமதி இந்திரா காந்தி வழக்கில் ‘தாய், தந்தை’ என்பதையே கூட்டரசு நீதிமன்றம் நிலைநிறுத்தியுள்ளது. இதன் பொருள்  பெற்றோர் இருவரின் சம்மதத்தையும் உள்ளடக்குகிறது.

வயது குறைந்த சிறார் மத மாற்ற விவகாரத்தில் தாய், தந்தை இருவரின் உரிமையையும் கூட்டரசு சட்டமைப்பு உறுதி செய்கிறது.

கூட்டரசு சட்டமைப்புகளின் விதியே மேலானது என்ற நிலையில் பிற சட்டங்கள் அதன் 
நிலைத்தன்மையை அசைத்து பார்க்கக்கூடாது என்று அவர் சொன்னார்.

அதேவேளையில் சிறார் சட்ட மசோதாவை எதிர்க்கும் வகையில் சட்டமன்ற அவையை ஒத்திவைத்த மாநில சட்டமன்ற சபாநாயகர் இங் சுயீ லிம்-இன் நடவடிக்கையை பாராட்டுவதாவும் அதனை ஆதரிப்பதாகவும்  கோபிந்த் சிங் தெரிவித்தார்.

No comments:

Post a Comment