Thursday 15 August 2019

பெ.ஆ.சங்கத்தின் ஒப்புதலுடன் ‘ஜாவி’ அமல்படுத்தலாம்- கல்வி அமைச்சு

புத்ராஜெயா-
காட்’  சித்திர மொழிக்கு பதிலாக ஜாவி எழுத்து பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் ஒப்புதலோடு தாய்மொழிப்பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்படும் என்று கல்வி அமைச்சு கூறியுள்ளது.
அண்மையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய ‘காட்’ சித்திர மொழி விவகாரம் முஸ்லீம் அல்லாதோரிடையே அதிருப்தியை அலையை ஏற்படுத்தியிருந்த நிலையில் தற்போது கல்வி அமைச்சு அதன் முடிவிலிருந்து இறங்கி வந்துள்ளது.

முந்தைய அமைச்சரவைக் கூட்டத்தில் ‘காட்’ மொழியை பள்ளிகளில் எவ்வாறு அமல்படுத்துவது என்பதை ஆசிரியர்களே தீர்மானிக்கலாம் என்று முடிவெடுக்கப்பட்டது.

ஆனாலும் அதற்கான எதிர்ப்பு ஓயாத நிலையில், தற்போதைய அமைச்சரவைக் கூட்டத்தின் எடுக்கப்பட்ட முடிவின்படி, காட் மொழிக்கு பதிலாக 'ஜாவி' மொழியை பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கம், பெற்றோர், மாணவர் சம்மதத்துடன் தமிழ், சீனப்பள்ளிகளில் அறிமுகப்படுத்தலாம் என்று கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தேசிய பள்ளிகளில் நடைமுறையிலுள்ள போதனையில் எவ்வித மாற்றமும் இல்லை என்று அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment