ஈப்போ-
பேரா மஇகா இளைஞர் பிரிவுத் தலைவர் நேருஜி முனியாண்டி உயர்மட்ட பதவிக்கு குறி வைத்துள்ளாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
சுங்கை சிப்புட் மஇகா இளைஞர் பிரிவுத் தலைவரான நேருஜி, நேற்று நடைபெற்ற வேட்புமனுத் தாக்கலில் தொகுதி நிலையிலான பதவிகளுக்கு போட்டியிடவில்லை.
இதன் மூலம் அவர் மாநில இளைஞர் பிரிவின் ஏதேனும் பதவிக்கும் தேசிய இளைஞர் பிரிவின் உச்சமன்ற பதவிக்கும் போட்டியிடுகிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
மஇகாவில் திருத்தப்பட்ட சட்டவிதிகளின்படி ஒருமுறை தொகுதி நிலையிலான பதவிகளை வகித்தாலே தேசிய மஇகா இளைஞர் பிரிவின் உச்சமன்ற பதவிக்கு போட்டியிடலாம் என கூறப்படுகிறது.
அதன் அடிப்படையில் சுங்கை சிப்புட் மஇகா இளைஞர் பிரிவுத் தலைவராக ஒரு தவணை பதவி வகித்த நிலையில் இளைஞர் பிரிவின் உச்சமன்றத்திற்கு போட்டியிடலாம் என கருதப்படுகிறது.
இதனிடையே, அடுத்த தலைமுறையினரை உருவாக்கும் பொருட்டு
இம்முறை சுங்கை சிப்புட் இளைஞர் பிரிவுத் தலைவர் பதவியை தற்காக்கவில்லை என நேருஜி கருத்து தெரிவித்தார்.
No comments:
Post a Comment