Friday 17 August 2018

100ஆவது நாளை தொட்டது பக்காத்தான் ஹராப்பான் ஆட்சி

ரா.தங்கமணி

கோலாலம்பூர்-
நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி ஆட்சியை கைப்பற்றி இன்றுடன் (ஆகஸ்ட் 16) 100 நாட்கள் நிறைவடைகிறது.

கடந்த மே 9ஆம் தேதி நடைபெற்ற நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலில் 60 ஆண்டுகால தேசிய முன்னணி ஆட்சி முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.

இனம், மதம், மொழி ஆகியவற்றை கடந்து 'மலேசியர்' என்ற ஓருணர்வுடன் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி ஆட்சி கட்டிலில் அமர வைக்கப்பட்டது.

முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமதுவை பிரதமர் வேட்பாளராகக் கொண்டு தேர்தலை சந்தித்த பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி பெரும்பான்மை நாடாளுமன்றத் தொகுதிகளை வென்று ஆட்சியை கைப்பற்றியதோடு பல மாநிலங்களின் ஆட்சியையும்  கைப்பற்றியது.

'100 நாட்களில் 10 வாக்குறுதிகள்' என்ன முழக்கத்தோடும் பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை உள்ளடக்கியும் தேர்தலை எதிர்கொண்ட பக்காத்தான் ஹராப்பானுக்கு மலேசியர்கள் வற்றாத ஆதரவை வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment