Wednesday, 8 August 2018

'இக்குவானிமிட்டி' கிள்ளான் துறைமுகத்தை வந்தடைந்தது


போர்ட் கிள்ளான்-
வர்த்தகர் ஜோ லோவின் ஆடம்பர சொகுசு  கப்பலான 'இக்குவானிமிட்டி' கிள்ளான் துறைமுகத்தை வந்தடைந்தது.

இந்தோனேசியாவில் கைப்பற்றப்பட்ட இந்த ஆடம்பர சொகுசு கப்பல் 20 மணிநேர பயணத்திற்கு பின்னர் இன்று பிற்பகல் 1.00 மணியளவில் கிள்ளான் துறைமுகத்தை வந்து சேர்ந்தது.

தேசிய சட்டத்துறை இலாகாவின் அதிகாரிகள் சோதனை மேற்கொள்ளும் வகையில் இக்கப்பல் இங்கு நிறுத்தப்பட்டுள்ளது. இச்சோதனை நடவடிக்கைக்குப் பின்னர் சிறப்பு கூட்டம் நடத்தப்படவுள்ளது.

இதனால் இங்கு 50க்கும் மேற்பட்ட அதிகாரிகள் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.




No comments:

Post a Comment