Wednesday 15 August 2018

சுங்கை சிப்புட்டில் அன்வார் போட்டியா?- விட்டுக் கொடுக்கிறாரா கேசவன்?

ரா.தங்கமணி

சுங்கை சிப்புட்-
பிகேஆர் கட்சியின் தேசியத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு ஏதுவாக சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கேசவன் தமது தொகுதியை விட்டுக் கொடுக்கலாம் என்ற ஆருடம் கூறப்படுகிறது.

டத்தோஸ்ரீ அன்வாரின் தீவிர ஆதரவாளராக கருதப்படும் கேசவன் அவருக்கு இத்தொகுதியை விட்டுக் கொடுக்கலாம் என்றும் அதற்கு பதிலாக செனட்டர் பதவி கேசவனுக்கு வழங்கப்படலாம் எனவும் சொல்லப்படுகிறது.
பிரதமர் துன் மகாதீருக்கு பிறகு பிரதமராக பதவியேற்கவிருக்கும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் முதலில் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டியது அவசியமாகிறது.

மஇகாவின் முன்னாள் தேசியத் தலைவர்களான துன் வீ.தி. சம்பந்தன், துன் ச.சாமிவேலு ஆகியோர் சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினராகவும் அமைச்சர்களாவும் பதவி வகித்துள்ளனர்.

நடந்து முடிந்த தேர்தலில் சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட கேசவன் மத்திய அரசாங்கத்தில் அமைச்சர், துணை அமைச்சராக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அவருக்கு எந்த பதவியும் வழங்கப்படாதது சுங்கை சிப்புட் மக்களுக்கு ஏமாற்றத்தையே அளித்தது.

இதனிடையே, பிகேஆர் கட்சியின் தேர்தலில் ரபிஸி ரம்லி அணியில் உதவித் தலைவர் பதவிக்கு போட்டியிடவுள்ளார்.

இவ்விவகாரம் தொடர்பில் கேசவனின் கருத்துகளை அறிய  தொடர்பு கொள்ள முயன்றும் கருத்துகளை அறிய முடியவில்லை.

No comments:

Post a Comment