Saturday 11 August 2018

குப்பைகளை கண்ட இடங்களில் வீசுவதை அடுக்குமாடி குடியிருப்பாளர்கள் தவிர்க்க வேண்டும்- கவுன்சிலர் கணேசன் வலியுறுத்து

ரா.தங்கமணி

ஈப்போ-
புந்தோங்கில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள் மக்கள் குப்பைகளை கண்ட இடங்களில் வீசாமல் சுத்தத்தை பேண வேண்டும் என்று புந்தோங் வட்டார கவுன்சிலர் ஆ.கணேசன் வலியுறுத்தினார்.

'சுத்தத்தை பேணுவோம்' என்பதை அடிப்படையாகக் கொண்டு தற்போதைய மாநில அரசு செயல்படுகின்ற நிலையில் மக்களும் அத்திட்டத்திற்கு ஆதரவு வழங்க வேண்டும்.

குறிப்பாக புந்தோங்கில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ளவர்கள் அங்கு தயார்படுத்தி வைக்கப்பட்டுள்ள குப்பை தொட்டிகளில் குப்பைகளை வீச வேண்டும்.

மாறாக, கண்ட இடங்களிலும் அடுக்குமாடி மேலிருந்தும் குப்பைகளை வீசக்கூடாது.

இத்தகைய நடவடிக்கை புந்தோங் வட்டாரத்தை தூய்மையற்ற பகுதியாக உருமாற்றி விடும் என்பதை இப்பகுதி மக்கள் உணர  வேண்டும்.

மேலும், கைவிடப்பட்ட நிலையில் இருக்கும் காலி நிலங்களின் உரிமையாளர் அவற்றை மாதந்தோறும் சுத்தம் செய்ய வேண்டும்.

காடு மண்டிக் கிடக்கும் காலி நிலங்களை சுத்தம் செய்யாததால் பாம்பு உட்பட விஷ ஜந்துக்களினால் அருகிலுள்ள மக்கள் அச்சம் கொள்கின்றனர்.

சம்பந்தப்பட்ட உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியும் அது உரிமையாளர்களிடம் கிடைக்காததால் அவற்றை ஈப்போ மாநகர் மன்றம் சுத்தம் செய்கிறது.

அதற்கான செலவீனத்தை  ஈப்போ மாநகர் மன்றம் நில வரியுடன் சேர்க்கும்போது அதன் கட்டணம் பல மடங்கு உயர்வு கண்டால் பிறகு குறை சொல்லக்கூடாது.

புந்தோங் வட்டாரத்தை வெளியிலிருந்து வரும் மக்கள் அசுத்தப்படுத்துவதில்லை. இங்கிருக்கும் மக்கள் தான் சுத்தத்தை பேண வேண்டும் என கணேசன் அறிவுறுத்தினார்.

No comments:

Post a Comment