Monday 13 August 2018

ஜோ லோவுக்கு சொந்தமான விமானம் பறிமுதல் செய்யப்படலாம்- பிரதமர் மகாதீர்


கோலாலம்பூர்
'இக்குவானிமிட்டி' ஆடம்பர சொகுசு கப்பருக்கு பின்னர் தொழிலதிபர் ஜோ லோவின் தனியார் விமானத்தையும் பறிமுதல் செய்யும் நடவடிக்கையை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக பிரதமர் துன் மகாதீர் குறிப்பிட்டார்.

சிங்கப்பூரில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இந்த தனியார் விமானம் கூட சர்ச்சைக்குரிய 1எம்டிபி நிறுவனத்திலிருத்து வாங்கப்பட்டிருக்கலாம்.

சம்பந்தப்பட்ட நிறுவனத்திலிருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணம் அனைத்தும் மீட்கப்படும் என அரசாங்கம் எண்ணம் கொண்டுள்ளது. அதற்கேற்ப நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படும் என மகாதீர் மேலும் சொன்னார்.

No comments:

Post a Comment