ரா.தங்கமணி
ஈப்போ-
ஈப்போவில் உள்ள ராஜா பெர்மாய்சூரி தெங்கு பைனுன் மருத்துவமனையில் கட்டப்பட்டு வரும் பெண்கள், குழந்தைகளுக்கான பிரிவும் இருதய நோய்க்கான பிரிவும் வரும் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் நிர்மாணிக்கப்பட்டு எங்களிடம் ஒப்படைக்கப்படும் என பேரா மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் அ.சிவநேசன் தெரிவித்தார்.
அண்மையில் சுகாதார அமைச்சர், துணை அமைச்சர், சுகாதாரப் பிரிவு மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள், சுகாதார இலாகா இயக்குனர் ஆகியவற்றுடனான சந்திப்பு நடைபெற்றது.
இதில் பேரா மாநிலத்திலுள்ள மருத்துவமனைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. பேரா மாநிலத்தில் 15 மருத்துவமனைகள் உள்ளன. இதில் 5 நிபுணத்துவ மருத்துவமனைகள் ஆகும்.
இதில் தெங்கு பைனுன் மருத்துஙமனையில் கட்டப்பட்டு வரும் இவ்விரு பிரிவு கட்டங்களும் 2016 செப்டம்பர் மாதமே கட்டி முடிக்கப்பட்டிருக்க வேண்டும்.
மூன்று ஆண்டுகள் காலதாமதமாக இக்கட்டடப் பணி நிறைவுப் பெறுகின்ற நிலையில் வரும் செப்டம்பர் மாதம் இவ்விரு பிரிவும் எங்களிடம் ஒப்படைக்கப்படும்.
ஆயினும், இதிலுள்ள இருதயப் பிரிவில் 'பைபாஸ்' அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடியாது. ஏனெனில் மருத்துவ நிபுணர் உள்ள நிலையில் மருத்துவ உபகரணப் பொருட்களும் மருத்துவ அதிகாரிகளும் இல்லாத நிலையில் இச்சேவை காலதாமதம் ஆகலாம். அதற்கான ஏற்பாடுகள் துரிதமாக மேற்கொள்ளப்படும் இக்கூட்டத்தில் பேசப்பட்டது.
அதோடு, இங்குள்ள மருத்துவமனைகளில் நிலவும் பல்வேறு பிரச்சினைகள் ஆராயப்பட்டு வருகின்றன.
குறிப்பாக, மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் அமர்வதற்கு நாற்காலி பற்றாக்குறை நிலவுவது போன்ற பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று சிவநேசன் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment