Saturday 11 August 2018

நஜிப்பை தற்காப்பதிலேயே அம்னோ நேரத்தை செலவிட முடியாது- தலைமைச் செயலாளர்

கோலாலம்பூர்-
முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கை தற்காப்பதிலேயே அம்னோ இன்னும் நேரத்தை வீணடிக்கக்கூடாது என அதன் தலைமைச் செயலாளர்  டான் அனுவார் மூசா குறிப்பிட்டார்.

அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியது, நிதி முறைகேடு உட்பட டத்தோஸ்ரீ நஜிப் மீது 7 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

"நஜிப்பை தற்காப்பதிலேயே நமது நேரத்தை வீணடிக்க முடியாது. நமது பயணத்தை தொடர்ந்து நாம் மேற்கொள்ள வேண்டும். இனியும் நாம் காத்திருக்க முடியாது.

இவை அனைத்திற்கும் அவரே (நஜிப்) பொறுப்பேற்க வேண்டும்.இந்த சுமைகளை அம்னோ நீண்ட காலம் சுமக்க முடியாது என அவர் மேலும் சொன்னார்.



No comments:

Post a Comment