Saturday 25 August 2018

மாமன்னர் பிறந்தநாளில் உயரிய விருதுகள் கிடையாது

கோலாலம்பூர்-
இவ்வாண்டு மாமன்னர் சுல்தான் முகமட் வி- இன் பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது உயரிய விருதுகள் ஏதும் வழங்கப்படாது என கூறப்படுகிறது.

வரும் செப்டம்பர் 9ஆம் தேதி மாமன்னரின் அதிகாரப்பூர்வ பிறந்தநாள் கொண்டாடப்படும்போது உயரிய விருதுகள் ஏதும் வழங்கப்படாது என பிரதமர் துறை இலாகாவின் அதிகாரி தெரிவித்துள்ளார்.

மாமன்னரின் கட்டளைக்கு ஏற்ப இவ்வாண்டு பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது பிரதமரின் உரை மட்டுமே இடம்பெறும் என பெயர் குறிப்பிடப்படாத அந்த அதிகாரி தெரிவித்தார்.

இவ்விவகாரம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் டான்ஸ்ரீ ராய்ஸ் யாத்திம் டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார்.

கடந்தாண்டு மாமன்னரின் பிறந்தநாளை முன்னிட்டு 1,518 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

அதில் 48 பேருக்கு ' டான்ஸ்ரீ' எனும் உயரிய விருதுகள் வழங்கப்பட்டன. மஇகாவின் முன்னாள் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ச.சாமிவேலு, மசீசவின் முன்னாள் துணைத் தலைவர் மைக்கல் செங், நாட்டின் முன்னாள் தலைமை நீதிபதி முகமட் ரவுஸ் சாரிஃப் ஆகியோர் 'துன்' விருதை பெற்றனர்.



No comments:

Post a Comment