Thursday 9 August 2018

கலைஞருக்கு மெரினாவில் இடம் ஒதுக்க வேண்டும் - நீதிமன்றம் உத்தரவு


சென்னை-
மறைந்த திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான கலைஞர் மு.கருணாநிதியின் உடலை மெரினாவில் அடக்கம் செய்ய இடம் ஒதுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மெரினாவில் உடக்கம் செய்வதற்கு தொடரப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறப்பட்டதால் அங்கு கலைஞரின் உடலை அடக்கம் செய்ய தடையேதும் இல்லை என நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து திமுக ச்யல் தலைவர் ஸ்டாலின் உட்பட திமுக தொண்டர்கள் கண்ணீர் விட்டு அழுதனர்.

No comments:

Post a Comment