Wednesday 8 August 2018

அன்வாருக்கு தொகுதியை விட்டு தர வெ.25 மில்லியன் பேரமா? - மறுத்தார் பிரபாகரன்


கோலாலம்பூர்-
பிகேஆர் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு தனது தொகுதியை விட்டுக் கொடுக்க 25 மில்லியன் வெள்ளி பேரம் பேசப்பட்டதாக வெளிவந்த தகவலை பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பி.பிரபாகரன் மறுத்தார்.

"இது பொய்யான தகவல். இது தொடர்பில் எவ்வாறு கருத்துரைக்க முடியும்" என பிரபாகரன் கேள்வி எழுப்பினார்.

இடைத் தேர்தல் வழி டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு ஏதுவாக பிரபாகரன் தனது தொகுதியை விட்டுக் கொடுக்க 25 மில்லியன் வெள்ளி பேரம் பேசப்பட்டதாக சமூக வலைதளங்களில் வைரலானது.

நாட்டிலேயே மிக இளம் வயது நாடாளுமன்ற உறுப்பினரான பிரபாகரன் திகழ்கிறார் என்பது குறிப்பிடதக்கது.

No comments:

Post a Comment