Tuesday 14 August 2018

'நாட்டின் எதிர்காலம் உஙகளின் கரங்களில் உள்ளது' - அரசு அதிகாரிகளுக்கு பிரதமர் அறிவுறுத்து


கோலாலம்பூர்-
நாட்டின் எதிர்காலம் உங்களின் கைகளில் உள்ளதால் தங்களது பொறுப்புணர்வை உணர்ந்து அதற்கேற்ப செயல்பட வேண்டும் என்று அரசு அதிகாரிகளுக்கு பிரதமர் துன் மகாதீர் அறிவுறுத்தினார்.

'இரண்டாம் உலகப் போரின்போது அணுவாயுத தாக்குதலுக்கு இலக்கான நாடு ஜப்பான். ஆனால் இன்று உலக அரங்கில் வளர்ச்சி கண்ட நாடாக அது மாறியிருப்பதற்கு அந்நாட்டு மக்களின் கடினமான உழைப்பேயாகும்.

எவ்வித சுயநலமும் ஊழல் நடவடிக்கையும் இல்லாததால் அந்நாடு இரண்டாம் உலகப் போரின்போது கண்ட பெரும்  வீழ்ச்சிக்கு பின்னர் தன்னை மறுசீரமைத்து கொண்டுள்ளது.

அதே போன்று ஊழல் நடவடிக்கைகளால் இன்று பொருளாதார ரீதியில் பின்னடைவை சந்தித்துள்ள இந்நாட்டை மீண்டும் கட்டி எழுப்புவதற்கு மக்களின் தன்னிகரற்ற ஒத்துழைப்பும் ஆதரவும் அவசியமாகிறது.

குறிப்பாக, அரசு ஊழியர்கள் நாட்டை வளப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். 'உங்களது கரங்களில் நாட்டின் வளர்ச்சி உள்ளது' என்பதை உணர்ந்து சுயநல போக்குக்கும் நம்பகமின்மைக்கும் இடமளிக்காமல் தங்களது கடமையை சிறப்பாக ஆற்ற வேண்டும் என்று  அரசு அதிகாரிகளுடனான கூட்டத்தின்போது துன் மகாதீர் இவ்வாறு கூறினார்.

No comments:

Post a Comment