ரா.தங்கமணி
ஈப்போ-
அறிவியல் பாட நேரத்தின்போது மூன்று மாணவர்கள் மீது சுடுநீர் கொட்டிய விவகாரம் தொடர்பில் தாம் கூறிய கருத்து தவறான பொருளில் விமர்சிக்கப்பட்டுள்ளது
எனவும் யாரையும் தற்காக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை என்று மாநில கல்வி ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் அப்துல் அஸிஸ் பாரி தெரிவித்தார்.
சித்தியவான், ஸ்ரீ மகா கணேசா வித்தியாசாலையில் அறிவியல் பாட நேரத்தின்போது இரண்டாம் ஆண்டு பயிலும் மூன்று மாணவர்கள் மீது சுடுநீர் கொட்டியதால் அம்மூவரும் ஈப்போ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு சென்றபோது தாம் கூறிய கருத்து தவறாக விமர்சிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் மீது சுடுநீர் கொட்டியது தொடர்பில் அவர்களின் பெற்றோர் சட்டத்திற்கு உட்பட்ட எந்த நடவடிக்கை எடுப்பதற்கும் தடை இல்லை என்ற அவர், யாரையும் தற்காக்க வேண்டிய அவசியம் இல்லை என்றார்.
மேலும், மாணவர்களின் நிலை குறித்து மருத்துவ அறிக்கை கிடைத்த பின்னர் மேல் விவரங்கள் தெரிவிக்கப்படும் என டாக்டர் அப்துல் அஸிஸ் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
No comments:
Post a Comment