Sunday 12 August 2018

தேமு மீதான நம்பிக்கையை மசீச இழந்து விட்டது- ஙா கோர் மிங்

கோலாலம்பூர்-
மசீச தனது சொந்த சின்னத்தில் போட்டியிட முடிவெடுத்துள்ளது அக்கட்சி தேசிய முன்னணியை நம்பவில்லை என்பதை புலப்படுத்துகிறது என பேரா மாநில ஜசெக தலைவர் ஙா கோர் மிங் தெரிவித்தார்.

மசீச தேசிய முன்னணியில் இருந்தபோதிலும் அது அக்கூட்டணியின் மீதான நம்பிக்கையை இழந்து விட்டது.

இதிலிருந்து 2 விஷயங்கள் தெளிவாக தெரிகிறது. மசீச தேசிய முன்னணியை நம்பவில்லை என்பதும் அக்கூட்டணியில் மசீச வெகு நாட்கள் நீடிக்காது என்பதும் இதன் மூலம் தெளிவாகிறது என ஙா கோர் மிங் கூறினார்.

No comments:

Post a Comment